புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் உலக அழிவு குறித்து பதிவு செய்துள்ள குறிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

வரும் 2060 ஆம் ஆண்டில் உலகம் அழியும் என கணித்துள்ள அறிவியல் மேதை ஐசக் நியூட்டன், கிறிஸ்தவர்களின் நம்பிக்கைபடி இயேசுவின் இரண்டாம் வருகையும் அப்போது அமையும் என அவர் கணித்துள்ளார்.

1643 ஆம் ஆண்டு பிறந்த ஐசக் நியூட்டன், கடவுள் குறித்தும் மதம் தொடர்பிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மட்டுமின்றி கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தை ஆழமாக கற்றுத்தேர்ந்த அவர், அது தொடர்பாக ஏராளமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் Jehovah Sanctus Unus என்ற புனைப்பெயரில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள நியூட்டன், அதில் உலகம் எப்போது அழியும் என்றும், 2060 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகம் மறுபடியும் கடவுளின் தேசமாக மாறும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here