ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உதாரணத்திற்கு சுனாமி, புயல்,டெங்கு காய்ச்சல், வெள்ளத்தில் மிதந்த சென்னை என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் சாதாரணமாகவே வந்து விடுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல் முறையில் புயல் ராமச்சந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே சில முக்கிய நிகழ்வுகளை கணித்து உள்ளார்.
அதன்படி, .
இந்த ஆண்டு இந்த மாதம் (அக்டோபர் மாதம்) முடிந்த பிறகு தமிழகத்தில் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கும என ஒரு வருடத்திற்கு முன்பாகவே கணித்து உள்ளார்.
வடகிழக்கு பருவ மழையினால் மதுராந்தகம முதல் தென் தமிழகம் வரை பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதை எப்படி நம்புவது..? அது உண்மை தானா..? இன்று இருக்கக்கூடிய நிலவரப்படி வானிலையை கணிக்க, நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என மட்டும் தானே கணிப்பார்கள் என பலருக்கும் யோசனைதான்.
ஆனால் இவர் சென்ற ஆண்டே கணித்தது போல சில விஷயங்கள் நடந்து தான் வருகிறது
அதன்படி,
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் என்று கணித்தார். அதே போன்று தான் நடந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 – 11 வரை கேரளாவில் வெள்ளம் ஏற்படும் என கணித்து இருந்தார். அவ்வாறே நடந்தது.
அதே போன்று, அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், பேஆப் பெங்காலில் அக் 12 முதல் அக் 16 வரையில், ஆந்திரா ஒரிசா இடையே சைக்லோன் உருவாகும் என கணித்து உள்ளார். இதனால் மதுராந்தகம் முதல் தென் தமிழகம் வரை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வட மாவட்டங்கள் – மிதமானதாக இருக்கும் என அவர் கணித்து உள்ளார்
அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், மழை பெய்ய தொடங்கி உள்ளது. ரெட் அலெர்ட் கூட விடுக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது, எப்ப்போது தான் மழை நிற்குமோ என்று தெய்வங்களை வேண்டும் அளவிற்கு மனம் செல்லும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் தான், அவர் இவ்வாறு கணித்து உள்ளதாகவும் அறிவியல் பஞ்சாங்கம் என்பது உண்மை..ஒரு சில சமயத்தில் தான் கணிதத்தில் சில மாற்றங்கள் வரலாம். ஆனால் பெரிய மாற்றம் இருக்காது…தான் கணித்த வாறே கட்டாயம் நடக்கும். அறிவியல் பஞ்சாங்கத்தை மேலும் பல வல்லுனர்கள் கொண்டு கணித்தால் 300 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பலவற்றை கணிக்கலாம் என்று உறுதிபட கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்
என்ன நடக்கிறது என்பதைபொறுத்திருந்து பார்க்கலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here