அரசுப்பள்ளியை பற்றிய விழிப்புணர்வு Song!

அரசுப்பள்ளி வாரீர் !


             —————-
(இன்றைய அரசுப்பள்ளி பற்றி அறியாதவர்களுக்காக இப்பதிவு சமர்ப்பணம்)
 
பள்ளி வயது குழந்தைகளே.. 
       அரசுப்பள்ளி வாரீர்! 
பதினான்கு வகை திட்டத்தால்
       பயன்பெற்று வாழ்வீர்! 
 
மின்நூல் வசதி கொண்ட
        பாடப்புத்தகம் பெறுவாய்! 
முப்பருவமும் எழுதிட
   குறிப்பேடுகளையும் பெறுவாய்! 
 
வண்ண வண்ணச்சீருடையால்
       நாள்தோறும் மிளிர்வாய்! 
வகுப்பிற்கேற்ற சீருடையை
       முப்பருவமும் பெறுவாய்! 
 
காலில் போடும் காலணியில் கூட
       இங்கு பிரிவினை இல்லை
தரமான காலணியை
    வயதிற்கேற்ப பெற்றிடுவாய்! 
 
வண்ணங்கள் தீட்டிடவும்
        வண்ணங்கள் கற்றிடவும்
வண்ண வண்ண பென்சில்களை
   வகுப்பிற்கேற்ப பெற்றிடுவாய்! 
 
நாளுக்கொரு உணவாய்
       வெரைட்டி உணவுகளை 
சரிவிகித உணவாம்
       சத்துணவு உண்பாய்! 
 
வசதியானவர் மட்டுமே
       வாங்கிடும் புத்தகப்பை
 இன்றோ அனைவர் தோளிலும்
       வண்ண வண்ண புத்தகப்பை! 
 
வாய்பாடு,அட்லஸ் எல்லாம்
 கடையில் வாங்கினோம் அன்று
விலையில்லா பொருட்களாக
  அனைவர் கைகளிலும் இன்று! 
 
ஜியாமன்ரியை நண்பரிடமிருந்தே
 கடன்வாங்கி வரைந்தேன் அன்று
அனைவருக்குமே விலையில்லா
   ஜியாமன்ரி பாக்ஸ் இன்று! 
 
அறிவைத்தேடி நடை நடந்து 
     கல்வி கற்றோம் அன்று! 
மிதிவண்டி,  பஸ்பாஸுடனே
  பயணம் செய்து கற்பாய் இன்று! 
 
கணினி வாங்கும் எண்ணம்
     கனவாய் போனது அன்று! 
மடிக்கணினியை கையில் தந்து
     கனவு நினைவானது இன்று! 
 
படிப்பை முடித்தவரே
போட்டித்தேர்வு எழுதினர் அன்று! எட்டாம் வகுப்பிலே(NMMS)
போட்டித்தேர்வு எழுதினர் இன்று
 
தொகையேதும் தர வேண்டாம்
     முதல் வகுப்பிலிருந்தே… 
ஊக்கத்தொகையை பெற்றிடுவீர்
   மூன்றாம் வகுப்பிலிருந்தே! 
 
ஆங்கில வழிக்கல்வியும்
   அரசுப்பள்ளியிலே!                      JEE, NEET பயிற்சிகள்
     மேல்நிலை வகுப்பிலே! 
 
நூலகம் சென்று புத்தகம்
        திரட்ட நேரமில்லை 
பள்ளிக்கொரு நூலகமாய் 
        புத்தக பூங்கொத்துகள்! 
 
கற்கண்டாய் கணிதம் இனிக்க
     கணித உபகரணங்கள் உண்டு
செய்து பார்த்து அறிவியல் அறிய
 ஆய்வகப்பொருட்கள் இங்குண்டு
 
அறிவியல் மனப்பான்மை பெற
அறிவியல் கண்காட்சி இங்குண்டு   சதுரங்க சாம்பியன் உருவாகிட சதுரங்கபோட்டியும் இங்குண்டு
PEDOGOGY, SALM, SLM
     கல்விமுறை இங்குண்டு… 
இணைய வழியில் மேலும் கற்க
      படவீழ்த்தியும் இங்குண்டு! 
 
எச்சூழல் மாணவரையும்
       பள்ளிச்சூழலுக்குள் மாற்றி
நட்பாய் அறிவை வளர்த்திடவே
   அன்பான ஆசான் இங்குண்டு 
 
புத்தம்புது பயிற்சியினால்
       ஆசிரியர்கள் மெருகுறுவர்
புதுமைகளை கற்றறிந்து
        மாணவர்களை புதுப்பிப்பர்! 
 
மாணவரின் நிறை குறைகளை
         ஆசான்கள் அறிவதுபோல் கற்றல் கற்பித்தலை ஆய்விட
   அதிகாரிகளும் வருவதுண்டு! 
 
பள்ளியைப்பார்வையிட SPD, 
JD,CEO,DEO,SUPERVISOR,BRTE
COLLECTOR,RDO,BDO,VHN,SMC
போன்ற அதிகாரிகள் வருவர்..
 
இத்தனை பார்வையின் மத்தியில்
எந்தப்பள்ளியின் தரம் குறையும்? 
அரசுப்பள்ளியை போற்றிடுவோம்
 அரசுப்பள்ளியில் கற்றிடுவோம்! 
 
நன்றியுடன்…… 
(அரசுப்பள்ளியில் பணியாற்றும்
    அரசுப்பள்ளி மாணவி)
        அ. யாஸ்மின் ராணி, 
        இடைநிலை ஆசிரியர், 
        PUMS, நாயக்கர்பட்டி, 
        அறந்தாங்கி ஒன்றியம்
        புதுக்கோட்டை மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here