ரத்த தானம் செய்தால் நான்கு நாட்கள் விடுமுறை!

ரத்த தானம் செய்தால் நான்கு நாட்கள் விடுமுறை!
ரத்த தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ரத்த தானம் செய்பவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது ஜார்க்கண்ட் அரசு.
ஜார்க்கண்ட் மாநில அரசு இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வேலை நாட்களில் ரத்த தானம் செய்ய முன்வந்தால், அவர்களுக்கு ஆண்டில் 4 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் நாள், தேசியத் தன்னார்வ ரத்த தான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அறிவிப்பு தேசியத் தன்னார்வ ரத்த தான முகாம் நடத்தப்பட்டபோது வெளியிடப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு, ஆண்டொன்றுக்கு 3,50,000 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், 1,90,000 யூனிட் ரத்தம் மட்டுமே கிடைக்கிறது. தேவையை விட ரத்தம் குறைவாக இருப்பதால், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், மாநில சுகாதார, கல்வி மற்றும் குடும்பநலத் துறைகளில் பணிபுரிபவர்கள் வரும் நாட்களில் தானாகவே ரத்த தானம் செய்வதற்கு முன் வந்தால் 4 நாட்கள் சிறப்பு விடுமுறைகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமையன்று (அக்டோபர் 1) ரெட் கிரஸ் அமைப்பு ஏற்பாடு செய்த ரத்த தான முகாம் மூலமாக 775 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here