நமது உடலில் பெரும்பாலான நோய்கள் வயிற்றில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. மேலும் இந்த நோய்களைக் உணவின் மூலமாகவே நம் முன்னோர்கள் குணப்படுத்தி வந்தனர்.

மேலும் நம் உடலில் நோய்கள் வரமால் தடுத்து நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உதவி புரியும் மூன்று முக்கிய உணவுப் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.

வெந்தயம்
  • வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளன.
  • வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியையும் கருமை நிறத்தையும் தருகிறது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். மேலும் வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும்.
  • வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.
ஓமம்
  • ஓமத்தை உணவில் சேர்த்துக் கொண்டு வர அஜீரணம், வயிற்று உப்புசம், அதிசாரம், சீதபேதி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசைபோலச் செய்து, வயிற்றின்மீது பற்றுப் போட வயிற்றுவலி குணமாகும். மேலும் ஓமம் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வறட்டு இருமல், இரைப்பிருமல், இவைகளைக் குணமாக்கும்.
கருஞ்சீரகம்
  • பலவித நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது கருஞ்சீரகம் எனும் ஒரு அற்புத மருந்து.
  • கருஞ்சீரகம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகளை இந்த மருந்துகள் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியடையும்.
  • கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here