இன்றைய ராசிபலன்
 • மேஷம்
  மேஷம்:
  பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன்  புது ஒப்பந்தம் செய்வீர்கள்.  உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள். 
 • ரிஷபம்
  ரிஷபம்:
  கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். நீண்ட நாட்க ளாக  தள்ளிப் போன காரியங் கள் இன்று முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.    
 • மிதுனம்
  மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. செலவினங்கள் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். தர்மசங் கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள். 
 • கடகம்
  கடகம்: எடுத்த வேலைகளைமுழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். எதிர்மறை எண்ணங்கள்வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். 
 • சிம்மம்
  சிம்மம்:
  எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவுப்பெருகும். சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.  
 • கன்னி
  கன்னி:
  எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உற வினர், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபார ரீதி யாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். முயற்சியால் முன்னேறும் நாள். 
 • துலாம்
  துலாம்:
  கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர் கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.           
 • விருச்சிகம்
  விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையும் திட்ட மிட்டு  செய்யப்பாருங்கள். குடும் பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். யாரையும் யாருக் கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபா ரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ வந்துச் செல்லும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.  
 • தனுசு
  தனுசு:
   உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு.கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில்புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப் படும் நாள். 
 • மகரம்
  மகரம்:
  பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை  
  தேடுவீர் கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். 
 • கும்பம்
  கும்பம்:
  புதிய திட்டங்கள்தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அநாவ சியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.
 • மீனம்
 • மீனம்:
  எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர் கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here