தேர்தல் சமயத்தில் போலி செய்திகள் பரவுவது தடுக்கப்படும்…பேஸ்புக், டுவிட்டர், கூகுள் உறுதி!

போலி செய்திகள் பரவ அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்தில் சமூக வலை தளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவை உறுதியளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது.. இதே யுக்தி இந்திய தேர்தலிலும் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போலி செய்திகளை எதிர்க்கொள்ள சமூக வலைதளங்களக்கு பல கட்டுப்பாட்டுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

வாட்ஸ்- ஆப் நிறுவனம் போலி செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், எங்களது தளங்களில் போலி செய்திகள் பரவ அனுமதிக்க மாட்டோம் என்று பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்துள்ளது.

தேர்தல் நடைமுறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டோம் என கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளது என்று தேர்தல் ஆணையர் ஓபி ராவத் தெரிவித்தார்.

இது கர்நாடகா சட்டமன்ற தேர்தலின் போது பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. வாக்காளர்களை குறிவைக்கும் போலி செய்தி, தகவல்களை கண்டறிய உதவி செய்யப்படும் என்று பேஸ்புக், டுவிட்டர் ஆகியவை உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here