NMMS EXAM 2018 – ONLINE REGISTRATION TIPS ( STEP BY STEP INSTRUCTION )

NMMS EXAM ONLINE REGISTRATION TIPS

இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து  புகைப்படம் ஒட்டி ரூ.50 உடன் தங்கள் தலைமை ஆசிரியரிடம் 1.10.18 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்ற ஆண்டு NMMS தேர்வு – online பதிவு – வழிமுறைகள் :

👉Step:1
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் “Click to access online portal” பகுதியை Click செய்யவும்

👉Step:2
திரையில் தோன்றும் WELCOME TO ONLINE PORTAL பக்கத்தில் NMMS EXAM NOV 2017 APPLICATION REGISTRATION – ஐ Click செய்யவும்.

👉Step:3
திரையில் தோன்றும் Log in பகுதியில் தங்கள் பள்ளிக்குரிய user id & password கொடுக்கவும். (குறிப்பு User id ல் DE0 என்பதில் 0 என்பது zero ஐ குறிக்கும்)

👉Step:4
தற்போது மீண்டும் ஒரு முறை user id & password கொடுக்கவும்.

👉Step:5
திரையில் முதலாவதாக தோன்றும் NOMINAL ROLL REGISTRATION ஐ Click செய்து மாணவரின் விவரங்களை பதிவு செய்து SUBMIT கொடுக்கவும். (குறிப்பு : அனைத்து விவரங்களும் விடுபடாமல் நிரப்பப்பட வேண்டும் )

👉Step : 6
மாணவனின் புகைப்படத்தை update செய்யவும். புகைப்படம்
25 Kb க்கு குறைவாக இருக்க வேண்டும். மாணவனின் விவரங்களை Online -ல் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக புகைப்படங்களை Resize செய்து 25 Kb க்கு குறைவாக Save செய்து கொள்வது வேலையை சுலபமாக்கும்.

👉Step:7
புகைப்படம் பதிவேற்றம் செய்தவுடன் திரையில் தோன்றும் download ஐ Click செய்து மாணவனின் online registration application ஐ Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறாக அனைத்து மாணவர்களின் விவரங்களை பதிவு செய்த பின் இறுதியாக…

*SCHOOL WISE REPORT ஐ Click செய்து School report (Summary report) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

*download செய்யப்பட்ட மாணவனின் online registration application – ஐ 2 நகல்கள் எடுத்து அதில் மாணவர் கையொப்பம், பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ( with Seal) இருப்பதை உறுதி செய்யவும்.

*தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அழிக்கவோ, புகைப்படம் மற்றும் தவறான விவரங்களை INDIVIDUAL REPORT/EDIT/PHOTO UPDATE/DELETE option ஐ பயன்படுத்திதிருத்திக் கொள்ளவோ முடியும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here