இன்று சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள்.

இந்நிலையில், வாட்ஸ்அப்பில் புதிதாக இரண்டு வசதிகள் வரவிருக்கின்றன. ஒன்று டார்க் மோட் (DARK MODE), மற்றொன்று Swipe to Reply.
வாட்ஸ்அப் அடுத்த பதிப்பில் இருந்து இந்த வசதிகள் கிடைக்கும். தற்போது பீட்டா வெர்ஷன் வெளியாகியிருந்தாலும், அதில் இந்த இரண்டு வசதிகளும் இன்னும் சேர்க்கப்படவில்லை. இன்னும் சோதனை நிலையிலேயே இருப்பதுதான் அதற்கு காரணம்.
via GIPHY

Dark Mode என்ற இந்த வசதியானது ஏற்கெனவே பல செயலிகளில் வழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். தற்போது அந்த வசதி வாட்ஸ்அப்புக்கும் வரவிருக்கிறது. இதன்மூலம் இரவில் தானாக ‘வொயிட் தீமில்’ இருந்து ‘நைட் தீமுக்கு’ மாறிக்கொள்ள முடியும். இந்த வசதி ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு இயங்குதளத்திற்கும் வரவுள்ளது.
swipe to reply என்ற வசதியானது ஏற்கெனவே ஆப்பிள் மொபைல்களில் இருப்பதுதான். தற்போது ஆண்ட்ராய்டுக்கு அப்டேட் ஆகவுள்ளது.

swipe to reply என்ற வசதி மூலம், வாட்ஸ்அப் குரூப்களில் அனுப்பப்படும் செய்திகளுக்கு மிக எளிதாக பதிலளிக்கலாம். தற்போது குரூப்பில் ஒருவரின் மெசேஜுக்கு ரிப்ளை செய்யவேண்டுமென்றால், அந்த மெசேஜை சில நொடிகள் பிரஸ் செய்து, பின்னர் ரிப்ளை பட்டனை தேர்வு செய்தால் மட்டுமே, ரிப்ளை மெசேஜ் அனுப்பமுடியும். ஆனால், இந்தப் புதிய வசதி மூலம், பிறரின் மெசேஜை வலதுபுறம் ஸ்வைப் செய்தாலே, ரிப்ளை வசதி வந்துவிடும்.
இந்த 2 அப்டேட்களும் விரைவில் அனைத்து மொபைலிலும் வந்துவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here