இஞ்சி அதிகமானால் – மென் குரலும் இறுக்கமாகும். 
பழைய சோறு, கஞ்சி அதிகமானால் – வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும். 
தேங்காய் அதிகமானால் – சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும். 
மாங்காய் அதிகமானால் – வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் – வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும். 
பாதாம் பருப்பு அதிகமானால் – வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும். 
முற்றிய முருங்கை சாப்பிட – வாயு சளி உண்டாகும். 
எருமைப்பால் அதிகம் குடிக்க – கிட்னி கல், அறிவு மங்கும். 
மிளகு –  உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும். 
மிளகாய் அதிகமானால் – வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும். 
காபி அதிகமானால் – கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும். 
டீ அதிகமானால் – உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும். 
எலுமிச்சை அதிகமானால் – பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும். 
எள்ளு அதிகமானால் – பித்தம் செரியாமை உண்டாகும். 
உப்பு அதிகமானால் – எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும். 
வெங்காயம் அதிகமானால் – தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.
குங்குமப்பூ அதிகமானால் – மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும். 
வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும். 
பச்சரிசி அதிகமானால் – சோகை நோய்.  அச்சுவெல்லம் அதிகமானால் – அஜீரணம்.  பலகாரம் அதிகமானால் – வயிற்று வலி. 
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதனை உணர்ந்து உணவின் அளவு இருத்தல் அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here