தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை..! ஆசிரியர்கள் மகிழ்ச்சி..!!


6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் பள்ளிக்கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர் என்பது 2 முறையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று சிறப்பாசிரியர்கள். பகுதி நேர ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் 16,500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு முதல் கட்டமாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள நிதி மூலம் மாத ஊதியமாக ரூ.5,000 வழங்கப்பட்டது. பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வாரத்துக்கு 3 நாள்கள் 2 மணி நேரம் பணி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பகுதிநேர ஆசிரியர் ஊதிய உயர்வு கோரி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி அவர்களின் சம்பளத்தை படிப்படியாக உயர்த்தி தற்போது மாதம் ரூ. 7,700 வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு தற்போது அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது,

பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக, 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 1,474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்துக்கொள்ளலாம்.

புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,500 வழங்கப்படும். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here