மருந்துச் சீட்டை பெரிய எழுத்துகளில் எழுத -அரசு உத்தரவு!

இனிமேல் மருத்துவர்கள் தங்கள் மருந்துச் சீட்டை தனி மற்றும்
பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் என்ன மருந்து எழுதுகிறார்கள் என்பதே புரியாதபடி இருப்பது வழக்கமாகும். மருத்துவர்கள் பலரின் கையெழுத்தை மருந்துக் கடைக்காரர்கள் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும் என்பதும் பலரும் அறிந்ததே. அதே நேரத்தில் அவர் எழுதிக் கொடுத்த அதே மருந்தை மருந்துக் கடைக்காரர் அல்லது மருந்தாளுநர் அளித்துள்ளாரா என்பதை யாராலும் அறிய முடியாமல் இருந்தது.

இந்த சந்தேகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்தது.கடந்த 21 ஆம் தேதி அனைத்து மருத்துவர்களுக்கும் அறிக்கை ஒன்றை அரசு அளித்துள்ளது. அந்த அறிக்கை அரசின் சுகாதாரத்துறை துணைச் செயளாளர் அகௌரி சஷாங்க் சின்ஹா வால் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு அலீக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “மக்களில் பலர் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பெயர்கள் தெரிந்துக் கொள்ள முடியாமல் உள்ளனர். ஆகவே இனி மருத்துவர்கள் தனி மற்றும் பெரிய எழுத்துக்களில் மருந்துச் சீட்டை எழுத வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் முதல் முறை எச்சரிக்கை அளிக்கப்படும். இரண்டாம் முறை மருத்துவர்களின் உரிமம் தற்காலிக நீக்கம் செய்யப்படும். மூன்றாம் முறையும் இது தொடர்ந்தால் மருத்துவரின் உரிமம் நிரந்தரமாக நீக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு சில மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் தரும் மருந்து குறித்து நோயாளிகள் புரிந்துக் கொள்ள இந்த நடவடிக்கை உதவும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சில மருத்துவர்கள் இந்த பழக்கத்தை வரவேற்ற போதிலும் இதற்காக தண்டனை அளிப்பது தவறு எனக் கூறி உள்ளனர். மருத்துவர்கள் இந்த புதிய முறைக்கு மாற கால அவகாசம் தேவை எனவும் அத்துடன் மருத்துவர்களிடம் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு காத்திருக்கும் நேரத்தில் வேகமாக செயல்பட முடியாமல் போகலம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here