அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவு கூடிய அற்புத உணவுகள்


மனித வாழ்வில் ஆரோக்கியமான நோயற்ற வாழ்விற்கு உதவக்கூடியது இயற்கை உணவு வகைகளாகும்.

நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீண்ட வாழ்நாளைத் தரவல்ல சில முக்கிய உணவு பொருட்களைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.

தக்காளி

தக்காளி சாஸ், கெட்சப் போன்ற அனைத்திலும் அதிகமான அளவில் லைகோபைன் உள்ளது. அவை தக்காளியில் தனித்துவமான, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட் கொண்டுள்ளதால் இவை இதய நோய் பாதிப்பை குறைப்பதோடு, புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

சால்மன்

நம் உடலில் உள்ள டெலோமியர்ஸ் எனும் செல்கள் குறுகிய காலத்தில் இறப்பிற்கு வழிவகுக்கலாம். இந்த செல்களின் இயக்கத்தை தடுக்கும் ஆற்றல் ஒமேகா 3 கொழுப்பு சால்மன் மீன்களில் அமிலத்தில் அதிகமாகவே உள்ளது.

கீரைகள்

கீரைகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கும்.மேலும் கீரையில் உள்ள மக்னீசியம் உடலின் தசை அமைப்புகளை சீராக வைக்க உதவும்.

கேல்

பச்சை இலை காய்கறிகளில் அதிக சத்துக்களை கொண்டவற்றில் ஒன்று கேல். கேலில் உள்ள அதிகப்படியான வைட்டமின் கே, இரத்த உறைதலை தடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.

ப்ளூபெர்ரி

உணவில் பெர்ரி சேர்த்து கொள்வதால் ஞாபக மறதி பிரச்சனையை சரி செய்ய முடியும். அதுவும், உறைய வைத்த பெர்ரிக்களில் தான் அதிகமான ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால் இதனை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

அவகேடோ

அவகேடோவில் உள்ள கொழுப்பு சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், உடலின் ஹார்மோன் இயக்கத்திற்கு மிகவும் உதவக்கூடியது.

தயிர்

தயிரில் உள்ள சத்துக்கள் குடல் இயக்கத்தை சமநிலைப்படுத்தி, நோய்எதிர்ப்பு மண்டலத்தையும், இதயத்தையும் பலப்படுத்துகிறது. மேலும் தயிரில் உள்ள கலோரிகளால் 31 சதவிகிதம் வரை ரத்த கொதிப்பை குறைக்கிறது.

பூண்டு

பூண்டில் உள்ள சல்பர், நல்ல நறுமணத்தை மட்டுமின்றி, ஆன்டிமைக்ரோபையல், ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்களையும் வழங்குகிறது. பூண்டு உட்கொள்ளும் பெண்கள் கீழ்வாதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

மாதுளை

மாதுளை இதயத்தின் இயக்கம் மற்றும் சிறுநீரக இயக்கத்தை சீராக்கி, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தருகிறது. தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஒட்டுமொத்த ரத்த அழுத்தத்தையும் குறைத்திடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here