கொய்யா இலை தேநீர் (நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்)

கனி வகைகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் 
கொய்யாப்பழம், பழம் மட்டும் இன்றி அதன் இலைகளும் மருத்துவ குணம்  வாய்ந்தவையே. இந்த மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இந்த இலையின்  மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.  கொய்யா இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும்  வயிற்றுப்போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.

பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டால் கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிடவேண்டும். இந்த தேநீர் பருகினால் எந்த காரணத்தினால்  வயிற்றுபோக்கு ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்திவிடும். கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை பருகுவதால் குறைவான வயிற்றுவலி, குறைவான  தண்ணீரால் வெளியேற்றப்படும் மலம், அதிலிருந்து எளிதில் தீர்வு காண முடியும். கொய்யா இலை வயிற்று போக்கிற்கு சிறந்த தீர்வாக இருக்கும்  என்று ரிவிஸ்டா இண்ஸ்ட்டியூட்டோ நிறுவனம் 2008 ஆய்வு செய்தனர். அதில் கொய்யா இலைச்சாறில் வயிற்றுப்போக்குக்கு பொதுவான காரணமாக  இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டது.

அதேபோல், இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை  ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நிறுவனம் 2010ல் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொய்யா இலையில்  தயாரிக்கப்பட்ட தேநீரை பருக கொடுத்தனர். இதில் அதை பருகியவர்களுக்கு குறைந்த மொத்த கொழுப்பு, குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புப்புரத  நிலைகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருந்தது தெரியவந்தது. அடுத்த எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில் பல மாற்றங்கள்  ஏற்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

கொய்யா இலையின் குடும்பம் ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் நீரிழிவை தடுக்க கொய்யா  இலையை மருந்தாக பயன்படுத்தலாம். இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின்  அளவில் மாறுதல்கள் ஏற்படும். கொய்யா இலையை இளம் தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு  கழுகி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here