தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில்இஸ்ரோ விஞ்ஞானிமயில்சாமி அண்ணாதுரைமாணவர்கள் மற்றும்பெற்றோர்களுடன்கலந்துரையாடினார். 

நிகழ்வுக்கு வந்தவர்களைமாணவி கீர்த்தியாவரவேற்றார்.பள்ளிதலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமைதாங்கினார்.முன்னாள்இஸ்ரோ இயக்குனர்மயில்சாமி அண்ணாதுரைமாணவர்களிடம்பேசும்போது , ராக்கெட்மூலம் விரைவில் நாம்வெளியூர் பயணம் செய்யும்நாள் உருவாகும்.அப்போதுஇங்கு இருந்து பலவெளிநாடுகளுக்குபலமணி நேரம் பயணம்செய்யும் நேரம் குறைந்துஅடுத்த நாட்டுக்கு அரைமணி நேரம் அல்லது ஒருமணி நேரத்தில் சென்றுவிடலாம்.நானும் 40ஆண்டுகளுக்கு முன்புஉங்களில் ஒருவனாகஉங்களைப்போல் இதேசூழ்நிலையில்தான் அரசுபள்ளியில்படித்தேன்.உங்களில்என்னை நான் இன்றுபார்க்கிறேன்.

என்னுடனான உங்கள்கலந்துரையாடல் உங்களைவளர்த்துக்கொள்ளும்வகையில் இருக்கவேண்டும்.நான் இரண்டாம்வகுப்பு படித்தபோதுஇரண்டு ரூபாய் பென்சில்பரிசாகவாங்கியதும்,என்னை என்அப்பா கேட்ட கேள்விஅடுத்தது என்ன?என்பதுதான் என்னை இந்தஅளவுக்குஉயர்த்தியுள்ளது.பென்சிலில் ஆரம்பித்து பத்மஸ்ரீ பட்டம்பெற்றதற்கு   பிறரிடம் நான்கேட்ட கேள்விகளும்,பிறர்என்னிடம் கேட்டகேள்விகளுமே எனதுவளர்ச்சிக்குகாரணம்.கேள்விகளைகேட்கும்போது அதற்குரியபதிலாக நீ இருக்கவேண்டும் என்றுஅப்துல்கலாம் அய்யாஎனக்கு சொன்னதைசெயல்படுத்தியதால்தான் செயற்கை கோள்களைஎன்னால் உருவாக்கமுடிந்தது . நீங்களும்கேள்விகளை கேட்பதுடன்அதன் பதில்களை அறிந்து உங்கள் வாழ்க்கையில்அதனைபயன்படுத்திகொள்ளுங்கள்.இவ்வாறுபேசினார்.நிறைவாகமாணவர் அய்யப்பன் நன்றிகூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here