அரசுப் பள்ளிகளில் பத்தாம்வகுப்பு மாணவர்களின்தேர்ச்சி விகிதம்குறைந்ததையடுத்து,மெள்ளக் கற்கும்மாணவர்களுக்குத் திறன்பயிற்சி வகுப்புகளைநடத்தப் பள்ளிக்கல்வித்துறைமுடிவெடுத்துள்ளது.

 

அரசுப் பள்ளிகளில்மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிக்கச்சிறப்பு வகுப்புகள், திறனறிதேர்வுகள் உள்ளிட்ட பலமுயற்சிகளை ஆசிரியர்கள்எடுத்து வருகிறார்கள்.ஆனாலும், மாணவர்களின்குடும்ப சூழல், அவர்களின்கற்கும் திறன் உள்ளிட்ட பலகாரணங்களால் தேர்ச்சிவிகிதம்அதிகரிக்கவில்லை.

மெள்ளக் கற்கும்மாணவர்களின் திறனைஅதிகரிக்கும் வகையில்,மெள்ளக் கற்போருக்குதிறன் வளர்க்கும் பயிற்சிஅளிப்பதற்குத் தமிழகபள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.காஞ்சிபுரம், தஞ்சாவூர்,நாகை உள்ளிட்ட 10மாவட்டங்களைத் தமிழககல்வித்துறை தேர்வுசெய்துள்ளது.

ஒரு மாவட்டத்துக்கு 101பள்ளிகள் வீதம் 1,010பள்ளிகள் தேர்வு செய்யப்படஉள்ளன. இதற்காகஆசிரியர்களுக்கு இரண்டுநாள்கள் சிறப்பு பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில்ஸ்ரீபெரும்புதூர்,மதுராந்தகம், செங்கல்பட்டு,புனித தோமையர் மலைஆகிய கல்விமாவட்டங்களில், தலா ஒருபயிற்சி மையம்தொடங்கப்பட உள்ளன.

மேலும், சிறப்பு பயிற்சிபெற்ற ஆசிரியர்களின்மூலம், ஐந்து கல்விமாவட்டங்களிலும் மெள்ளக்கற்கும் மாணவர்களுக்குப்பயிற்சி அளிக்கப்படும்.இதன் மூலம்மாணவர்களின் தேர்ச்சிஅதிகரிப்பதோடுமட்டுமல்லாமல், இடைநிற்றல், உயர் கல்விபயில்வதற்குத் தயக்கம்தவிர்த்தல் எனப் பலகுறைபாடுகள்களையப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here