தயக்கத்தை விடுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

உ.பி., மாநிலம், வாரணாசியில் நேற்று, பள்ளி குழந்தைகளுடன், தன், 68வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் கலந்துரையாடினார்.

பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: மாணவர்கள், தயக்கத்தை விடுத்து, துணிச்சலுடன் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்பதன் மூலம், சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதுடன், புதிதாக பல விஷயங்களை அறிய முடியும்.
மாணவர்கள், விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும். மைதானங்களில் விளையாடுவதை பழக்கப்படுத்த வேண்டும். படிப்பை தவிர, பலதரப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம், அது, எதிர்காலத்தில் உதவிகரமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக,பள்ளிக்கு வந்த, பிரதமர் மோடியை, மாணவ – மாணவியர், உற்சாகத்துடன் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here