அரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு பயிற்சி

அரியலூரில் ஆசிரியர்களுக்கான

ஆங்கில உச்சரிப்பு பயிற்சிமுதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்து சிறப்புரை. Read English Book 1500 புத்தகங்கள் 1500 மாணவர்களுக்கு சென்று வரலாற்றுச் சாதனை.

15.09.2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் (கிளை) சார்பில் அனைத்து ஆசிரியப்பெருமக்களும் கலந்து கொள்ளும் விதமாக ஆங்கில மொழியை வாசிக்க உச்சரிப்பு பயிற்சிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் 150 க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். திரு. அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நல்ல கருத்துகளையும், ஆங்கில உச்சரிப்பு பயிற்சியின் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் Read English Book புத்தகத்தை பயன்படுத்தியதன் விளைவாக மாணவர்கள் வாசிப்புத்திறன் உயர்ந்து உள்ளதை பள்ளியில் நேரில் பார்த்ததாக முதன்மை கல்வி அலுவலர் கூறினார்கள்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் மாநில துணைச் செயலாளருமான E. இராஜேந்திரன் அவர்களும், அரியலூர் மாவட்ட செயலாளர் திரு. எழில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.
பின்னர் ஆசிரியர்களுக்கு முழுமையான நேரடியான ஆங்கில உச்சரிப்பு பயிற்சியானது திரு. ஸ்டனிஸ் ரத்தினம் அவர்களால் தெளிவாக நடத்தப்பட்டது.
மாணவர்களுக்கு ஆங்கில மொழியை வாசிக்க உச்சரிப்பு பயிற்சி எப்படி கொடுப்பது என்பதை Read English Book just in 30 days via phonetic method புத்தகத்தை உருவாக்கிய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த திரு. கு.செல்வக்குமார் அவர்களால் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் அனைவரும் ஆவலுடன் கலந்து கொண்டு தாங்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் இருந்தது என்று கூறினார்கள்.
பயிற்சி முடித்த பிறகு ஆசிரியர்களால் Read English Book 1500 புத்தகங்கள் வாங்கி 1500 மாணவர்களுக்கு சென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
புத்தகமானது மாணவர்கள் பள்ளியில் உள்ள அனைவரின் கைகளுக்குச் சென்று பயிற்சி அளித்தால் மாணவர்கள் வாசிப்புத்திறன் மேம்படும்.
புத்தகங்கள் தேவைப்படும் பள்ளிகள் திரு. கு.செல்வக்குமார் (8122440081) அவர்களை தொடர்பு கொள்ளவும்.
பயிற்சியானது சிறப்புற நடைபெற தலைவர். திரு. சீனிவாசன், செயலாளர் திரு. சண்முகம் பொருளாளர். திரு. அருள்ஜோதி அவர்களால் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் ஆங்கில மொழியை வாசிக்க உச்சரிப்பு பயிற்சி மூலம் அரியலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here