முதுகுவலி, மூட்டுவலி, பக்கவாதம்:- இவையெல்லாம் நீங்க 73 எளிய மருத்துவம்

1.   சங்குபற்பம் 100மிகி,அமுக்கராசூரணம் 1கிராம் 5-10மிலி தேனில்  தினமிருவேளை கொள்ள மூட்டுவலி தீரும்

 2.   பிண்டத்தைலம் அல்லது வாதகேசரித்தைலம் தடவி வெந்நீரில் ஒற்றடமிட மூட்டுவலி, முதுகுவலி தீரும்
3.   நொச்சி,தழுதாழை,வாதநாராயணன் இலைகளை வேகவைத்து ஒற்றடமிட மூட்டுவலி, வீக்கம் குணமாகும்
4.   தழுதாழை இலைகளை வி.எண்ணையில் வதக்கி கட்ட சுளுக்கு, மூட்டுவலி, குணமாகும்
5.   தழுதாழை இலைகளை ஆலிவ் எண்ணையில் வதக்கிக்கட்ட விரைவாதம், நெறிக் கட்டிகள், வாதவீக்கம் குணமாகும்
6.   வாதநாராயணன் இலைகளை சமைத்துச் சாப்பிட,வி.எண்ணையில் வதக்கி ஒற்றடமிட வாதவலி, வீக்கம்,கட்டிகள் குணமாகும்
7.   வாதநாராயணன் இலைச்சாறு 1தேகரண்டி தினம் காலையில் பருகிவர கை,கால் குடைச்சல், வலி குணமாகும்
8.   வாதநாராயணன் இலைச்சாறு1லி ,மஞ்சள்கரிசாலை,குப்பைமேனி, வெற்றிலை, சாறு வகைக்கு கால்,வேப்பெண்ணை,வி.எண்ணை,ந.எண்ணை வகைக்கு அரைலி, சுக்கு,மிளகு,திப்பிலி , சீரகம், கருஞ்சீரகம்,மஞ்சள் வகைக்கு 20கிராம்,பசும்பால் அரை லி, சேர்த்துக் காய்ச்சி, 21எருக்கம்பூ சேர்த்து காய்ச்சி வடித்து பூசிவர பக்கவாதம், பாரிசவாயு,உடல்இழுப்பு,உடல்வலி தீரும்
9.   உத்தாமணி இலைசாற்றுடன் சமன் எலுமிச்சைசாறு கலந்து பூச மூட்டுவலி கட்டுப்படும்
10.  50கிராம் குங்கிலியதூளை அரைலி .ந.எண்ணையில் காய்ச்சிப் பூச மூட்டுவலி தீரும்
11.  குப்பைமேனிச்சாறு சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி வடித்துப்பூச மூட்டுவலி தீரும்

12.  ஊமத்தைஇலையை ந.எண்ணையில் வதக்கி ஒற்றடமிட கீல்வாயு குணமாகும்
13.  போஸ்தக்காய்1,துத்திஇலை1பிடி சிதைத்து,சுண்டக்காய்ச்சி ஒற்றடமிட கீல்வாயு குணமாகும்
14.  வெள்ளைக்கடுகை அரைத்து,பருத்தித்துணியில் தடவிக்கட்ட கீல்வாயு, இரத்தக் கட்டு குணமாகும்
15.  கல்யாணமுருங்கை இலைகளை நசுக்கி,வதக்கிக்கட்ட கீல்வாயு குணமாகும்
16.  பற்பாடகம்வேர் 100கிராம் சிதைத்து,1லி .ந.எண்ணையில் காய்ச்சி வடித்துப் பூசிவர கீல்வாயு குணமாகும்
17.  நெருப்பில்சுட்டசெங்கல்மீது,எருக்கன்பழுப்பு இலைகள் 3 பரப்பி,குதிகாலை 5 நிமிடங்கள் வைத்து எடுக்க குதிகால்வாதம் தீரும்
18.  மிளகாய்பூண்டு இலைகளை அரைத்துப் பற்றிட இடுப்புவலி குணமாகும்
19.  கோரைக்கிழங்குசூரணம் அரைதேகரண்டி தினமிருவேளை 200மிலிபாலில் கலந்து பருக மூட்டுவலி,தசைவலி குணமாகும்
20.  முடக்கற்றான் இலைகளை இரசமாக செய்து உணவில் சேர்த்து சாப்பிட கைகால் குடைச்சல், மூட்டுவலி குணமாகும்

21.  மூசாம்பரம்100,அதிமதுரம்100,சிற்றாமுட்டி100,கற்பூரம்20கிராம்,குண்றிமணி20கி, சுக்கு40 கிராம்சேர்த்தரைத்து,தேவையான அளவெடுத்து 1முட்டைவெண்கரு, 1தேகரண்டி ந.எண்ணை சேர்த்துக்  கலந்து வீக்கங்களுடன் கூடிய மூட்டுவலிக்குப் பற்றிட குணமாகும்
22.  கோதுமையை பொன்னிறமாய் வறுத்துப் பொடித்து,சலித்து தேன் கலந்து சாப்பிட மூட்டுவலி குணமாகும்
23.  கொன்றை வேர்பட்டை 100கிராம் சிதைத்து,5ல்1ன்றாய்க் காய்ச்சி 200மிலி, தினமிரு வேளை பருகிவர குடல்வாதம்,வாதநோய்கள் தீரும்
24.  கஸ்தூரிமஞ்சள்1,சிறிதுசாம்பிராணி,1தேகரண்டி கடுகு,நீர்விட்டரைத்து, மண் சட்டியிலிட்டு சூடேற்றி,பொறுக்கும் சூட்டில் பற்றிட மூட்டுவலி குணமாகும்
25.  சங்கிலை,வேம்பு,நொச்சி,நாயுருவி,குப்பைமேனிஆகியவற்றில் வேதுபிடிக்க வாத வீக்கம்,வலி, கீல்வாயு தீரும்
26.  மூக்கிரட்டை இலையை பொரியல்,துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டுவர வாயுநோய்கள் வராது
27.  4,5வெள்ளைப்பூண்டை பாலில் இட்டுக் காய்ச்சி,150மிலி பால் வீதம் சாப்பிட்டுவர மூட்டுவலி குணமாகும்
28.  புதினா இலைசாற்றில் பச்சைக்கற்பூரம் சேர்த்து இழைத்து அழுத்தித் தேய்த்துவர மூட்டுவலி குணமாகும்
29.  வேலிப்பருத்தி சாற்றில் சுக்கு,பெருங்காயம் பொடித்துப் போட்டு இளஞ்சூட்டில் பற்றிட மூட்டுவலி, வீக்கம் குணமாகும்
30.  வேலிப்பருத்திவேரை சிதைத்து,புதுமண்சட்டியிலிட்டு அடுப்பேற்றி பொறுக்கும் சூட்டில் ஒற்றடமிட மூட்டுவலி குணமாகும்
31.  வெங்காயச்சாற்றுடன் சமன் கடுகெண்ணை கலந்து தேய்த்துவர வாதவலிகள் கட்டுப்படும்
32.  சுக்கை உரைத்து கைகால் மூட்டு வீக்கங்களுக்குப் பற்றிட குணமாகும்

33.  நன்னாரி வேர் ஊறல் குடிநீர் 30மிலி தினமிருவேளை பருகிவர வாதநோய், தோல்நோய் தீரும்
34.  ஆவாரைபிசின்,விதை சமன் பொடித்து,3கிராம்,அரைதேகரண்டி தேனுடன் கலந்துண்டு வர நரம்புதளர்ச்சி,மூட்டுவலி,பிடிப்புகள்,சருமவெடிப்புகள், வறட்சி குணமாகும்
35.  சித்தரத்தை,சீந்தில்கொடி,சிற்றாமுட்டிவேர்,அதிமதுரம்,நெருஞ்சில்,ஆமணக்குவேர் வகைக்கு சமனெடுத்து கஷாயம் செய்து சாப்பிட பாரிசவாயு (விரைவீக்கம்) குணமாகும்
36.  நிலவேம்புக்குடிநீர்100மிலி,200மிலி வெந்நீரில் கலந்து தினம்3வேளை பருகிவர முதுகுவலி குணமாகும்
37.  முடக்கற்றான் இலையையரைத்து தோசைமாவுடன கலந்து தோசை செய்து சாப்பிட வாத நோய்கள் தீரும்
38.  செம்பரத்தைபூ கஷாயத்துடன் ,மான்கொம்புபற்பம் 1கிராம் கலந்து பருகிவர பாரிசவாயு குணமாகும்.இதயத்துடிப்பு ஒழுங்குபடும்.குருதி சுத்தமாகும்
39.  அத்திப்பாலை பற்றிட மூட்டுவலி விரைவில் தீரும்
40.  கட்டுக்கொடிவேர் ,1துண்டு சுக்கு,4மிளகு சேர்த்து காய்ச்சிப் பருக வாதநோய், வாதவலி, கீல்நோய் தீரும்
41.  சாறுவேளை இலையை வதக்கிக் கட்ட கீல்வாயு வீக்கம் குறைந்து வலி தீரும்
42.  சிற்றாமுட்டிவேர் 100கிராம் சிதைத்து 500மிலி ந.எண்ணையில் காய்ச்சி தேய்த்து வர மூட்டுவலி வாதநோய்கள் தீரும்
43.  முட்சங்கன்இலை,வேர்பட்டை சமனரைத்து,சுண்டைக்காயளவு,காலை மாலை 20 நாள் வெந்நீரில் கொள்ள ஆரம்பநிலையில் உள்ள பாரிசவாதம்,வாயு, குடைச்சல், பக்கவாதம் தீரும்
44.  நொச்சிஇலை1பிடி,மூக்கிரட்டைவேர்,காக்கரட்டான்வேர் வகைக்கு அரைபிடி, சிதைத்து, 1துண்டுசுக்கு,6மிளகு,1தேகரண்டிசீரகம் சேர்த்து,2ல்1ன்றாய்காய்ச்சி,30மிலி காலைமாலை கொடுத்துவர ஆரம்பநிலை இளம்பிள்ளைவாதம்(போலியோ) தீரும்
45.  சப்பாத்திக்கள்ளி முள்நீக்கி வி.எண்ணையில் வாட்டிக்கட்ட முடக்குவாதம் தீரும். ஒத்தடமும் கொடுக்கலாம்
46.  பாவட்டை இலையை வதக்கி இளம்சூட்டில் கட்ட வாதவீக்கம்,வலி குணமாகும்
47.  மிளகாய்பூண்டுவிதைஎண்ணை2துளி,சர்க்கரையில்,காலைமாலை சாப்பிட்டுவர பாரிசவாயு, பக்கச்சூலை,இழுப்பு,முகவாதம்,இளம்பிள்ளைவாதம் தீரும்
48.  மிளகாய்பூண்டு வேர்40கிராம் சிதைத்து,250மிலி நீரில்100மிலியாக காய்ச்சி, தினமிரு வேளை பருக வாதநோய்,வாதவீக்கம்,பாரிசவாதம் தீரும்

49.  முடக்கற்றான்இலை,சூரத்தாவாரைஇலை,உத்தாமணிஇலை,வகைக்குப்பிடி,வதக்கி, 500 மிலி நீரிட்டு 200மிலியாகக் காய்ச்சி காலை3நாள்,1வாரம்விட்டு3நாள்,7முறை கொடுக்க பாரிசவாயு குணமாகும்
50.  விழுதிஇலைக்குடிநீரில்,வி.எண்ணையில் இரசம் செய்து உணவுடன் கொள்ள ஓரிருமுறை மலங்கழிந்து,மலப்புழுநீங்கும்.வாதநீரைவெளியேற்றி வீக்கம் குறைந்து குத்தல்குடைச்சல் வலி தீரும்
51.  முள்ளங்கி இலைச்சாறு 5மிலி தினம் பருகிவர மலக்கட்டு, நீர்க்கட்டு, சூதகக்கட்டு, எளிய வாத நோய்கள்தீரும்                                               
52.  அமுக்கராசூரணமாத்திரை2,தினம்2வேளைகொள்ள முதுகுவலி தீரும்.
53.  நொச்சிஇலைசாறு1தேகரண்டி,மிளகுத்தூள்1கிராம் சிறிதளவுநெய் சேர்த்து தினம்2 வேளை பருக மூட்டுவலி இடுப்புவலி  வீக்கம் குணமாகும்
54.  தழுதாழைஇலை1பிடிவென்நீரில் கொதிக்க வைத்து குளித்துவர குடிக்க வாதவலி குணமாகும்                                                                                                 
55.  வாதநாராயணன் இலைசூரணம்3கிராம் தினம்1வேளை வெந்நீரில் கொள்ள குடல்வாயு குணமாகும் .                                                                                              
56.  ஜாதிக்காய்,சுக்கு வகைக்கு20கிராம் சீரகம்50கிராம் பொடித்து அரைகிராம் தூளுடன் கால்தேகரண்டி சர்க்கரை சேர்த்து உணவுக்குமுன் சாப்பிட குடல்வாயு குணமாகும்
57.    ஜாதிக்காய் எண்ணையை பூசிவர புண்கள் காயங்கள் பாரிசவாயு கட்டுப்படும்
                                 
58.    100கிராம் சிற்றாமுட்டி வேரை சிதைத்து 500மிலி ந.எண்ணையில் காய்ச்சி வடித்து பூசிவர மூட்டுவலி வாதநோய்கள் குணமாகும்
                             
59.    காட்டெருமைப்பால்(எருக்கன்) அழுத்தித் தேய்த்துவர வாதவலி குணமாகும்
60.    மீன்எண்ணை 1தேகரண்டி தினம்2வேளை பருகி மூட்டுவலி உள்ள இடத்திலும் தேய்த்துவர மூட்டுவலி குணமாகும்             
                                           
61.    முள்ளங்கி சமூலச்சாறு 100மிலிதினம் காலை பருகிவர மூட்டுவலி குணமாகும்
62.  தே.எண்ணை,வி.எண்ணை,வே.எண்ணை கலந்து வலி உள்ள இடங்களில் தேய்த்து, வெயிலில் அமர்ந்து மெதுவாக தேய்த்துவிட மூட்டுவலி குணமாகும்                                           
63.  வாதநாராயணன் இலைசாறு1லி, வி.எண்ணை1லி,பூண்டு20கிராம், திரிகடுகு வகைக்கு 40கிராம், வெண்கடுகு 10கிராம், அரைத்து பதமாய் காய்ச்சி வடித்து (வாதமடக்கித் தைலம்) காலை2தேகரண்டி சாப்பிட்டுவர வாதரோகம், கீல்வாயு, முடக்குவாதம், நரித்தலைவாதம் ,இளம்பிள்ளை வாதம், நடுக்குவாதம்,  நரம்புத் தளர்ச்சி, கைகால்குடைச்சல் தீரும்.
64.  சித்திரமூலம்,மிளகரனை,நொச்சி இவற்றின் வேர்பட்டை வகைக்கு 200கிராம் பொடித்துக் கலந்து திரிகடி குளிர்ந்த நீரில் கொள்ள சகலவாதமும் தீரும்.                                                   
65.  கால்கிலோ இஞ்சியை தோல்சீவி நறுக்கி குப்பைமேனிசாறு விட்டு விரவி 40கிராம் வெள்ளெருக்கம் பூ அல்லது பட்டையை அரைத்துப் பிசறி இரவில் பனியில் வைத்து காலைமாலை 6 வேளை சாப்பிட அண்டவாதம் தீரும்.     
66.  தேங்காய்க்குள் கடுகை போட்டுமூடி ஒருசிரட்டை வெந்தபிறகு கடுகை மோரில் அரைத்து புன்னைக்காயளவு 3நாள் கொள்ள சங்குவாதம் தீரும்.

67.  முருங்கைபட்டை அரைத்து எலுமிச்சையளவு,300மிலி எலுமிச்சைசாறில் கொடுக்க குடல்வாதம் தீரும்.
68.  மான்செவிக்கள்ளி இலைசாற்றை 3நாள் தடவி வெந்தீர் குடிக்க கெண்டைக்கால் வாதம் நீங்கும்     
69. தழுதாழை,நொச்சி,வாதமடக்கி இலைகளை இடித்து நீரில் காய்ச்சி. தோளில் வி.எண்ணை தடவி ஒத்தடமிட சோளவாதம் தீரும்.                 
70.  பரங்கிப்பட்டை.திரிகடுகு வகைக்கு சமன் சூரணித்து திரிகடி,வாததேகிக்கு தேனிலும், இளந்தேகிக்கு பசுநெய்யிலும் 10நாள் கொள்ள உட்குடைச்சல், சூலை, கடுப்பு,வாயு, வாதக்கடுப்பு நீங்கும்.வாயு பதார்த்தம் நீக்கவும்.
71.    பிரண்டையை சூரணித்து எருக்கரசம் விட்டு வதக்கிக் கட்ட மொழி வீக்கம் தீரும்.                                                 
72.    சங்கிலைச்சாறும் வெள்ளாட்டுப்பாலும் கலந்து கால்படி 3நாள் கொள்ள திமிர் நீங்கும்.                                                                                                     
73.    இலந்தையிலையை அரைத்து காடியில் கரைத்து மத்தால் கடைந்து வரும் நுரையை உடம்பில் பூச எரிவாத எரிச்சல் தீரும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

1 COMMENT

  1. All over the tips are to useful to humans now a days so this and critical uses of tips kindly give in your site when we have to taken

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here