மத்திய அரசு, தற்போதுள்ளபல்கலைக்கழக மானியக்குழுவைக் கலைத்து விட்டுஇந்திய உயர்கல்விஆணையம்அமைக்கவிருப்பதும்,ஆசிரியர் தகுதித்தேர்வையடுத்து தமிழகஅரசு புதிய போட்டித்தேர்வைஅறிவித்திருப்பதும்ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் மட்டுமல்லாதுகல்வியாளர்களையும்கலக்கத்தில்ஆழ்த்தியுள்ளன.

 சுய சிந்தனையைவளர்ப்பதே உயர்கல்வியின்நோக்கம் என்றகொள்கையோடுஉருவாக்கப்பட்டதுபல்கலைக்கழகக் கல்விவாரியம். இதற்குக்காரணமானவர் தத்துவப்பேராசிரியராக வாழ்வைத்தொடங்கி குடியரசுத்தலைவராக உயர்ந்த டாக்டர்சர்வபள்ளிஇராதாகிருஷ்ணன். அவர்தலைமையில் 1948-இல்உருவாக்கப்பட்டது இது.

 “அனைவருக்கும் தரமானஉயர்கல்வி’ என்றஇலக்கோடு 1956-இல்உருவான பல்கலைக்கழகமானியக் குழு (யு.ஜி.சி.)சட்டபூர்வ அமைப்பு.மாணவர் கல்வி உதவித்தொகை திட்டத்தை முன்வைத்த சி.டி. தேஷ்முக்மற்றும் மகளிர்பல்கலைக்கழகங்களைநிறுவ திட்டங்கள் தீட்டியமாதுரிஷா ஆகிய இருவரும்ஒரு ரூபாய் மாதஊதியத்துக்கு இதன்தலைவர்களாகப்பணியாற்றினர். இவ்வாறுகல்வியாளர்களாலும்,தொலைநோக்குப்பார்வையாளர்களாலும்உருவாக்கப்பட்ட ஒருகல்விக் கழகம் இப்போதுகலைக்கவிருப்பதுவருத்தத்தை அளிக்கிறது.

 இப்போது இருக்கும்பல்கலைக்கழக மானியக்குழுவைக் கலைத்துவிட்டுஇந்திய உயர்கல்விஆணையம் என்ற புதியஅமைப்பு வரவிருக்கிறது.இதனால்பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும்தொடர்பே இல்லாதவர்கள்,இனி அனைத்து உயர்கல்விநிறுவனங்களின்திட்டத்தை மதிப்பிட்டுமானியம் வழங்கலாம்.

 உயர்கல்வியின்எதிர்காலத்தைக்கேள்விக்குள்ளாக்கவிருக்கும் இந்த நடவடிக்கையின்முன்னோட்டம் 2018 ஜூன் 28அன்று மனித வளமேம்பாட்டுத் துறைஅமைச்சகத்தின்இணையதளத்தில்ஆங்கில மொழியில் மட்டும்வெளியிடப்பட்டது. வேறுஎந்த இந்திய மொழியிலும்வெளியிடப்படவில்லை.

 கருத்து கேட்கும்முன்வரைவாகவே அதுமுன்வைக்கப்பட்டாலும்குறுகிய கால அவகாசமேகருத்து கேட்புக்குத்தரப்பட்டது. அதிலும்மசோதா என்பதற்குப்பதிலாக சட்டம் என்றபதத்துடன் “இந்தியஉயர்கல்வி ஆணையம்சட்டம் 2018′ முன் வரைவாகஅறிவிக்கப்பட்டது.

 ஒரு சட்டம்நிறைவேற்றப்படுவதற்குமுன்பாகநாடாளுமன்றத்தில்அதற்கான மசோதாதாக்கல் செய்யப்படும்.அதற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல்கிடைத்த பிறகுதான்சட்டமாக மாறும். அதுவரைஅது வரைவு மசோதாஎன்றே அழைக்கப்படும்.ஆனால் இந்த ஆவணம்”முன் வரைவுச் சட்டம்’ என்றுகுறிப்பிடப்பட்டிருப்பதுவியப்பளிக்கிறது.

 கல்வி என்பது மத்தியப்பட்டியலிலும், மாநிலப்பட்டியலிலும் இடம்பெற்றிருப்பதால் இந்தவரைவு மசோதா மாநிலஉரிமையை மீறும் விதமாகஅமைக்கப்பட்டுள்ளது. இதுஅரசமைப்புச் சட்டத்தின்நோக்கத்திற்குஎதிரானதாகும் என்றுமாநிலங்கள்எதிர்க்கின்றன.

 அத்துடன் இந்த வரைவுமசோதா பிரிவு 3துணைப்பிரிவு (6)-இன்படிஉயர்கல்வி ஆணையத்தின்தலைவர் பதவிக்குவெளிநாட்டு குடிமக்களில்ஒருவரை நியமிப்பதற்குவழி செய்கிறது.

 “பல்கலைக்கழக மானியக்குழு’ என்னும் அறுபதாண்டுகால சட்டபூர்வ அமைப்பு,அனைத்து அரசுக் கல்விநிறுவனங்களுக்கும், அரசுஉதவி பெறும் கல்விநிறுவனங்களுக்கும்போதுமான நிதிகிடைப்பதைஉறுதிப்படுத்துவதற்காகஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் கல்வி ஒரு சமூகப்பொருளாகஉறுதிப்படுத்தப்படுகிறது.இந்த அமைப்பைக்கலைப்பதற்கு இவ்வளவுஅவசரம் ஏன்?

 முந்தைய ஐக்கியமுற்போக்கு கூட்டணிஅரசும் பல்கலைக்கழகமானியக் குழுவைஒழித்துக்கட்டதிட்டமிட்டிருந்தது.அப்போதைய மனிதவளமேம்பாட்டு அமைச்சர்கபில்சிபல், யுஜிசிசெயல்படா அமைப்பாகஉள்ளது என்றும் மாற்றுஅமைப்பை உருவாக்குவதுபற்றியும் பேசியுள்ளார்.

 யுஜிசி செயல்படாஅமைப்பாக இருப்பதற்குயார் காரணம்? அதனைசெயல்பட வைக்கும்பொறுப்பு அரசுக்குஇல்லையா? இந்தக்கேள்விகள் பரவலாகஎழுந்ததும் அப்போதையஅரசு அடங்கிப் போனது.

 தமிழக அரசின்கல்வித்துறை, நீண்டகாலத்திற்குப் பிறகு பெரும்மாறுதல்களைச் செய்துமக்கள் மத்தியிலும்,மாணவர் மற்றும் பெற்றோர்மத்தியிலும் புதியநம்பிக்கைகளைஉருவாக்கிக்கொண்டிருக்கிறது.

 பள்ளி ஆசிரியர்நியமனத்துக்குத் தகுதித்தேர்வு வந்தபோதே அதைக்கல்வியாளர்களும்,ஆசிரியர் இயக்கங்களும்எதிர்த்தனர். பள்ளி,கல்லூரிப் படிப்பு முடிந்தபிறகு ஆசிரியர் பணிக்கானபயிற்சியும், பட்டயமும்பெற்ற நிலையில், இந்தத்தேர்வு தேவைதானா என்றகேள்வி எழுந்தது.

 இந்நிலையில், இப்போதுதமிழக அரசின் ஆசிரியர்பணியிடங்களுக்குபோட்டித் தேர்வுநடத்தப்படும் என்றுஇரண்டாவது தேர்வையும்அறிவித்திருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சியது போலஇருக்கிறது.

 தமிழ்நாட்டில் ஆசிரியப்பயிற்சிப் பட்டம்பெற்றவர்களும், கல்வித்துறையில் பட்டம்பெற்றவர்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்து, அந்தவரிசையின் அடிப்படையில்பணி இடங்களுக்குத்தேர்ந்தெடுக்கப்படுவதேஇதுவரை இருந்து வந்தநடைமுறை.

 இந்த நிலை மாற்றப்பட்டுஅவ்வப்போது உருவாகும்காலிப் பணியிடங்களுக்குநேரடியாகவே போட்டித்தேர்வை நடத்தி,தகுதியானவர்களைத்தேர்ந்தெடுக்கும்வகையில்தான் ஆசிரியர்தகுதித் தேர்வுஅறிமுகப்படுத்தப்பட்டது.இப்போது அந்தத் தகுதித்தேர்வும் போதாமல்,இன்னொரு தேர்வும்நடத்தப் போவதாகத் தமிழகஅரசு கூறுவது ஏன்?

 வேலை வாய்ப்புஅலுவலகம் மூலம்தகுதியான ஆசிரியர்கள்கிடைப்பதில்லை என்றும்,அப்படி கிடைப்பவர்கள்காலம் கடந்து வேலைக்குவருவதால் படித்ததைமறந்து விட்டிருக்கிறார்கள்என்றும் சொல்லப்பட்டது.

 இப்போது படிப்பைமுடித்துவிட்டு வருபவர்கள்உடனடியாகத் தகுதித் தேர்வுஎழுதி வெற்றி பெறும்வாய்ப்பு இருக்கும்போதுஅவர்களுக்குப் பாடங்கள்மறந்து போகவும்வாய்ப்பில்லை.அப்படியிருந்தும் தகுதித்தேர்வு, போட்டித் தேர்வுஎன்று இரண்டு தேர்வுகள்நடத்த வேண்டிய அவசியம்என்ன?

 வேலையில்லாத்திண்டாட்டத்தைப் போக்கவேண்டிய அரசுகள் தங்கள்கடமைகளில் இருந்துநழுவுகின்றன. இதுமாணவரிடம்அவநம்பிக்கையையும்,ஊழலையும் வளர்க்கவேஉதவும். ஆசிரியர்தேர்வாணையம்ஆண்டுதோறும் நடத்திடவேண்டிய ஆசிரியர் தகுதித்தேர்வு, உரிய காலத்தில்நடத்தாமல் தள்ளிப் போய்க்கொண்டே யிருக்கிறது.கடந்த முறை நடந்த தகுதித்தேர்வு பற்றிய ஊழல்புகாரும் இப்போதுவெளிச்சத்துக்குவந்திருக்கிறது. 200பேருக்கு அதிக மதிப்பெண்அளிக்கப்பட்டு தேர்ச்சி பெறவைத்திருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் ஆசிரியர்தகுதித் தேர்வை ஆசிரியர்தேர்வு வாரியம் நடத்திவருகிறது. கடந்த 2017-ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம்தகுதித் தேர்வுநடத்தப்பட்டது. இத்தேர்வை7 லட்சத்து 53 ஆயிரம்ஆசிரியர்கள் எழுதினர்.அவர்களில் 34,979 பேர்தேர்ச்சி பெற்றனர்.

 அத்தேர்வைத் தொடர்ந்துநடத்தப்பட்ட அரசுப்பாலிடெக்னிக்விரிவுரையாளர் தேர்வில்,மதிப்பெண்ணில்முறைகேடு நடைபெற்றதாகபுகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வுவாரியம் அத்தேர்வை ரத்துசெய்தது. பாலிடெக்னிக்விரிவுரையாளர் தேர்வுவினாத்தாள்களை “ஸ்கேன்’செய்த அதேநிறுவனம்தான் கடந்தஆண்டு ஏப்ரல் மாதம் நடந்ததகுதித் தேர்வுவிடைத்தாள்களையும்”ஸ்கேன்’ செய்திருந்தது.விரிவுரையாளர் தேர்வைப்போலவே தகுதித்தேர்விலும் மதிப்பெண்குளறுபடி செய்யப்பட்டுஇருப்பதாக ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு ஏராளமானபுகார்கள் வந்தன.

 இந்தப் புகார்களைத்தொடர்ந்து, புதியநிறுவனத்தின் மூலம்தகுதித் தேர்வுவிடைத்தாள்கள் “ஸ்கேன்’செய்யப்பட்டன. அப்போதுசுமார் 200 பேருக்கு அதிகமதிப்பெண் அளிக்கப்பட்டுதேர்ச்சி பெறச்செய்திருப்பது தெரியவந்தது.

 அந்த 200 பேரின்விடைத்தாள்களுக்குப்பதிலாக சரியான விடைஎழுதப்பட்ட வேறு விடைத்தாள்களை கணினியில்உள்ளீடு செய்து அதிகமதிப்பெண்வழங்கப்பட்டதை ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள்கண்டுபிடித்துள்ளனர்.

 இதைத் தொடர்ந்து அந்த200 தேர்வர்கள் மீதுகாவல்துறையில் புகார்செய்யப்பட்டதுடன் அவர்கள்இதர தேர்வுகளை எழுதவும்ஆசிரியர் தேர்வு வாரியம்தடைவிதித்து நடவடிக்கைஎடுத்துள்ளது. இவ்வாறுநடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் ஊழல் நடப்பதுஇது முதன்முறையல்ல.காலம் அவற்றை மறந்துவிடுகிறது. அரசுத்துறைகளும் அவற்றைமறைத்து விடுகின்றன.ஆனால் ஊழல் மட்டும்தொடர்ந்து கொண்டுதான்இருக்கிறது.

 பெயரளவுக்கு “தகுதிதேர்வு’ என்றும், “போட்டித்தேர்வு’ என்றும்கூறப்படுகிறதே தவிர,உண்மையானவர்களுக்குச்சென்று சேரவில்லை.பணம் படைத்தவர்கள்பாதியில் தட்டிப் பறித்துக்கொள்ள வழிவகுக்கிறது.இது அரசுக்கும்,தொடர்புடையதுறைகளுக்கும்தெரியாதா? நன்கு தெரியும்.தெரிந்துதான் எல்லாம்நடக்கிறது. இது தடுத்துநிறுத்தப்பட வேண்டும்.

 மாற்றங்கள் மட்டுமேமாறாதவை என்பதுஇயற்கை விதி. அந்தமாற்றங்கள்ஏற்றங்களுக்குத்துணைபோக வேண்டுமேதவிர ஏமாற்றங்களுக்குத்துணை போகக் கூடாது

செய்தி:தினமணி..

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here