நாட்டில் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்றும் மற்ற மாநிலங்களை விட வட கிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிசோரம் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன என்றும் மேகாலயா மாநிலத்தில் உள்ள 41 கிராமங்களில் ஒரு பள்ளிகள் கூட கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவா மாநிலத்தில் உள்ள கிராம பள்ளிகள் பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here