‘தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’ தபால்துறை போட்டி அறிவிப்பு
தபால் துறையின் சார்பில், ‘என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’, என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.தபால் துறையின் சார்பில், அனைவருக்கும் பொதுவாக கடிதம் எழுதும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் எழுதுவதற்கான தலைப்பு, ‘என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’, என வழங்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ‘இன்லான்ட்’, தாளில் கடிதம் எழுதுபவர்கள், 500 வரிகளுக்கு மிகாமலும், ‘ஏ4’, தாளில் எழுதுபவர்கள் ஆயிரம் வரிகளுக்கு மிகாமலும் எழுத வேண்டும்.கடிதங்களை, எழுதி அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் கூடுதல் தகவல்கள் குறித்து, தபால் துறை இணையதளத்தில் பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here