பூமியின் புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.! ஆச்சர்யம் ஆனால் உண்மை.!

பல அறிஞர்கள் மற்றும் அறிவியல் விங்ஞானிகள் ஏலியன் மற்றும் வேற்றுகிரகவாசிகளை தேடிப் பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடி இவர்கள் அயராது முயற்சித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
ஏலியன்களை நேரில் பார்த்ததாக சிலர் சொல்லி போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததானால்,நம்பியும் நம்பாமலும் பல செய்திகள் நம்மை குழப்பிக்கொண்டே தான் இருக்கிறது. வேற்று குரத்தில் புதிய உயிரினங்களைத் தேடி திரிந்த அறிஞர்கள் பலருக்கும் அண்மையில் நடந்த நிகழ்வு அதிர்ச்சி அளித்துள்ளது. வேற்று குரத்தில் உயிரினம்
வேற்று குரத்தில் உயிரினங்களைத் தேடி திரிந்த விங்ஞானிகள் போல் லண்டனில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சில தினங்களுக்கு முன் புதிய உயிரினத்தைப் பூமியிலேயே கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வகை உயிரினம் மீன் வகையைச் சார்ந்தது என்றும் அவற்றின் நடவடிக்கை மற்றும் உருவம் வித்தியாசமாக இருப்பதாய் இந்த ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் பசிபிக் பெருங்கடலில் உள்ள அடகாமா அகழியின் அடிமட்ட ஆழத்தில் இந்த புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
டீப் ஸீ லேண்டர் என்ற அதிநவீன தொழில்நுட்ப ஆழ்கடல் நீர்முழ்கி ரோபோட் இன் உதவியுடன் இந்த அரியவகை உயிரினியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதி நவீன ரோபோட் இல் ஒரு மானிடரும் நீருக்கடியில் இயங்கும் கேமராவும் கொண்டுள்ளது. அந்த தரையிறங்கி இயந்திரம் 5 மைல் தூரத்தை 4 மணிநேரத்தில் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அது ஆழத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆழ் கடலின் அமைப்புகளைப் பதிவு செய்யும்பொழுது புதிய வகை உயிரினம் இருக்கும் காட்சிகளையும் அது பதிவு செய்துள்ளது. அந்தக் காட்சிகளை ஆராயும் பொழுது இது வரை பார்த்திராத நத்தைமீன் போன்ற வடிவத்தில் புதிதாய் ஒரு உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நத்தைமீன் இனங்கள் 6400 அடி ஆழத்தில் வாழ்வதாகக் கூறப்படும் ஆழத்தில் இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வழுவழுப்பான உடலமைப்பு நீளமான வழுவழுப்பான உடலமைப்பு கொண்ட இந்த மீன் மிகவும் லேசான வெளிப்படையான  தோலுடன் மிருதுவான அசைவுடன் செயல்படுகிறது. இந்த புதிய உயிரினத்திற்கு, தற்போதைக்கு பிங்க், நீலம் மற்றும் ஊதா அடகாமா நத்தைமீன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த ஆழத்தில் இதுவரை காணப்பட்ட மீன்களை விட இவை பெரியவை என்று தெரிவித்திருக்கின்றனர். செதில் இல்லாத அந்த மீன் இன் வலிமையான எலும்புகள் பற்கள் மற்றும் காதின் உட்பகுதியில் அமைந்துள்ளது. மிகுந்த அழுத்தம் மற்றும் குளிர்ச்சியான நீரில் வாழ்வதற்கு ஏதுவாக அதன் உருவமைப்பு அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மற்ற மீன்களை வேட்டையாடி இந்த மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கிறது என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

லண்டன் நேஷனல் ஹிஸ்டரி அருங்காட்சியகம்

கடலின் ஆழத்தில் இருந்து அந்த மீன்களை மேலே கொண்டு வந்தால் அவை இளகி உருகி விடும் தன்மை உடையது. இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மீனைப் பலவித தொழிநுட்ப முறைகளை மேற்கொண்டு அந்த உயிரினத்தை வெளியே எடுத்து வந்து லண்டன் நேஷனல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here