பிளஸ் 2 ஹால் டிக்கெட் வரும் 17 வெளியீடு

பிளஸ் 2 தனி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், வரும், 17ம் தேதி முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு வரும், 24 முதல், அக்., 4ம் தேதி வரை, துணை தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், வரும், 17, பிற்பகல், 2:00 மணி முதல் ஹால் டிக்கெட் பெறலாம். 

அரசு தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.எழுத்து தேர்வு மற்றும் செய்முறை பாடங்களில், செய்முறை தேர்வில், 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று, தேர்ச்சி பெறாதவர்கள், செய்முறை தேர்வை கட்டாயம் மேற்கொள்வதுடன், எழுத்து தேர்விலும் பங்கேற்க வேண்டும்.மேலும், விபரங்கள் தேவைப்படுவோர், தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, தெரிந்து கொள்ள வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here