ரோட்டோர கடைகளில் காளான் சாப்பிடுபவர்கள் இதை படித்து விட்டு சாப்பிடுங்க…


நம்மில் பலரும் ரோட்டோர கடைகளில் பானிபூரி மசால் பூரி பேல் பூரி காளான் போன்ற பல உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை ருசித்து ருசித்து சாப்பிடிருப்போம். விலை குறைவு சுவை அதிகம் என்பதால் இது போன்ற கடைகளுக்கு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வரவேற்பு அதிகம் தான்.

இந்த உணவுகளின் சுவையை பார்க்கும் நாம் இவற்றை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்கை பற்றி கவலைப்படுவதில்லை. பெரும்பாலான கடைகளில் காளான் என்ற பெயரில் விற்கப்படும் உணவில் இருப்பது காளான் இல்லை என்பதே நூறு சதவீதம் உண்மை.

காளான் இல்லை என்றால் வேறு என்ன?

முட்டைக்கோஸ் மைதா மாவுடன் உப்பை சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து எடுத்ததை தான் காளான் என்கிறார்கள். இதனுடன் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபி பவுடர் காரத்துக்கு மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து வானலியில் ஊற்றியை கலவையை வேகவைத்து வாடிக்கையாளருக்கு தட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாக்கை சுண்டியிழுக்கிறது. இது தான் காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இந்த விஷயம் தெரியாத பலரும் காளான் சுவையை மனதில் நினைத்தபடி போலியான காளான் உணவுககளை விரும்பி சுவைக்கின்றனர். சுகாதாரத் துறையினர் இந்த வகையான காரம் ஜிலேபி பவுடர் அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ் மைதா மாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது உடலின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர்

மேலும் ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து ஆரோக்கியத்து ஆபத்தை விளைவிக்கிறது. இது போன்ற உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்பு சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனினும் வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடிப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் கூட விற்பனை சூடுபிடிக்கிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here