B.V.Sc.,வரும், 22, 23ல், இரண்டாவது கட்ட கவுன்சிலிங்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, வரும், 22, 23ல், இரண்டாவது கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இப்படிப்புக்கான, முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரியில், ஜூலையில் நடந்தது. அதில், கால்நடை மருத்துவம் – கால்நடை பராமரிப்பு படிப்பில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 306 இடங்களும் நிரம்பின. 

அதேபோல, பி.டெக்., உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், 94 இடங்களும் நிரம்பின. முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்களை பெற்ற, 20க்கும் மேற்பட்டோர், கால்நடை மருத்துவ கல்லுாரிகளில் சேராமல் உள்ளனர்.இந்த இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 22, 23ல், வேப்பேரி, கால்நடை மருத்துவ கல்லுாரியில் நடைபெற உள்ளது.மேலும், கவுன்சிலிங்கிற்கு தகுதி பெற்ற மாணவர்கள் விபரம், மதிப்பெண்கள் விபரம் குறித்து, www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து, கால்நடை மருத்துவ தேர்வு குழு அதிகாரி கூறியதாவது:கால்நடை மருத்துவத்தில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 20ல் முடிகிறது. அதில், நிரம்பாத இடங்கள் குறித்து, அதன்பிறகே தெரிய வரும். எனவே, எவ்வளவு இடங்களுக்கு, கவுன்சிலிங் நடைபெற உள்ளது என்பது குறித்து, 21ம் தேதி தெரிவிக்கப்படும்.இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிந்த பின், அக்., 3ல், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here