தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு; ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவக்கம்

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., 
வெளியிட்டது. ஆன்லைன் கவுன்சிலிங்கில், இன்று முதல் 
மாணவர்கள் பதிவு செய்யலாம்.

வேளாண் இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் 
ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் 
நுழைவுத் தேர்வுகள் மூலம், இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகிறது.

கடந்த ஜூன் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடந்த, தேசிய வேளாண் 
நுழைவுத்தேர்வுகள்,தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து 
செய்யப் பட்டது. மறுதேர்வுகள்ஆக.,18, 19ல் நடந்தன. பல்வேறு 
காரணங்களால் தாமதமாகிய நிலையில், தற்போது நுழைவுத்தேர்வு 
முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆய்வுக் 
கவுன்சில் வெளியிட்டுள்ளது.

https://icarexam.net/ என்ற ஐ.சி.ஏ.ஆர்., இணையதள முகவரியில், 
லாகின் செய்து, மதிப்பெண் அட்டை மற்றும் பங்கேற்பு கடிதத்தை 
மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேசிய வேளாண் 
ஒதுக்கீட்டு ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள், இன்று 
துவங்குகின்றன.ஆன்லைன் கவுன்சிலிங் இணையதளத்தில், 
தேர்வுகளை தேர்ந்தெடுத்து, கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் பதிவு 
செய்து கொள்ளலாம். இதற்கான, கடைசி தேதி, செப்.,13 
கவுன்சிலிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின், முதல் 
கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், செப்., 15ல் வெளியிடப்படுகிறது.

ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை பதிவு, சான்றிதழ் 
சரிபார்ப்பு, கட்டணம் செலுத்தல் ஆகிய நடைமுறைகள், செப்.,16 
முதல் 20 வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், 
செப்., 23 வெளியிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான 
சேர்க்கை நடைமுறைகள், செப்.,24 முதல் 28 ம் தேதி வரை 
நடக்கின்றன. கவுன்சிலிங் உதவிகளுக்கு, 011 – 2584 3635, 011 – 2584 6033 
ஆகிய எண்களில் தொடர்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here