அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்களில் 1683 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. மேலும், மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த மே மாதம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் 2018-19ம் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே 2640 காலிப் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதிக்கவும், அதற்கான நிதி ஒதுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்துக் கொடுக்கவும் ஆணை வெளியிட கேட்டுக் கொண்டார். கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து 2018-19ம் கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை 1883 கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை (கூடுதல் 1) பணியமர்த்த அனுமதியும், திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை இக்கல்வியாண்டு முதல் பின்பற்றவும் அரசு ஆணையிடப்படுகிறது.  இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here