தமிழ்நாடு அறிவியல் இயக்கம்ஆசிரியர் தின கட்டுரை போட்டிக்கு அழைப்பு கடைசி தேதி 15.09.18)

      ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்படுகிறது. அதற்கு படைப்புகளை அனுப்பலாம்,”என, அதன் மாநில செயலாளர் தே.சுந்தர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் கட்டுரை போட்டிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு போட்டிக்கு 6 முதல் 12 ம் வகுப்பு பள்ளி மாணவ , மாணவிகளுக்கு இது எங்கள் வகுப்பறை, கல்லுாரி மாணவர்களுக்கு என் கனவு , பள்ளி, கல்லுாரி
ஆசிரியர்களுக்கு கல்வியில் தொழில்நுட்பம், பொதுமக்கள், ஆர்வலர்களுக்கு அசத்தும் அரசு பள்ளி என்ற தலைப்புகளில் எழுதி அனுப்ப வேண்டும்.
கட்டுரை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சொந்த படைப்புக்களாக, ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அனுப்ப வேண்டும். அனுப்பவேண்டிய நாள் :15.09.18
அனுப்ப வேண்டிய முகவரி தெய்வேந்திரன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், முல்லை நகர், அரண்மனைபுதுார், தேனி மாவட்டம். மேலும் விபரங்களுக்கு90808 25194 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here