10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை தேர்வு, வரும், 18ல், துவங்குகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

இந்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு, விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு, 18 முதல், 20ம் தேதி வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.அறிவியல் செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், ஏற்கனவே நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்காத வர்கள், புதிய தேர் வர்கள் என, அனைவரும், இந்த செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இந்த தேர்வில் பங்கேற்க முடியாது. செய்முறை தேர்வு குறித்த விபரங்களை, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here