ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக் கூறிய தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப…

புதுக்கோட்டை,செப்.4:ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தன்னார்வத்துடனும் அக்கறையுடனும் செயலாற்றி வரும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியினை கல்வியாளர் சங்கமம் மூலமாக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலாளரும் தொல்லியல் துறை ஆணையருமான த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார்….

ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்களின் பேரிலக்கணமாம் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் ஐந்தாம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில் தங்களின் அன்பை விழைகிறேன்..

வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிக்காமல் ஒழுக்கம்,பண்பு,ஆண்மீகம்,பொதுஅறிவு,ஆற்றல் மேம்பாடு,திறமை வளர்த்தல் ,தன்னம்பிக்கை ,வாழ்வியல் என பன்முகத் திறன்களை பகுத்துக் கூறி சிறந்த குடிமகனாக்கும் உன்னதமானதோர் தெய்வீகப் பணியே ஆசிரியப் பணியாகும்.

மாணவ சமூகத்தின் மத்தியில் குறிக்கோள் ,இலட்சியம் ,எதிர்காலம் இவற்றை நன்கு பதிய வைத்து அவர்களின் சீரிய வழிகாட்டியே ஆசான்..ஒரு தேசத்தின் எதிர்காலத்தை தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுபவரே நீர்…

மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குபவரே ஆசிரியர்..

மனித சமுதாயச் சிற்பிகளே,தங்களை இந்த நல்லதோர் தருணத்தில் நினைவு கூர்ந்து வணங்கி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here