மாணவர்களிடம் ஆளுமையை வளர்ப்பவர்களே கனவு ஆசிரியர்கள்
:வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் v.நந்தகுமார் பேச்சு..

காரைக்குடி,செப்.2
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் என்ற ஆசிரியர்களின் கூடல் நிகழ்வு நடைபெற்றது..விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் வரவேற்றுப் பேசினார்.ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஹயாசிந் சுகந்தி தலைமை வகித்தார்..

வருமானவரித்துறை கூடுதல் ஆணையாளர் v. நந்தகுமார் விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசியதாவது: வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் அடையாளம் காட்டினால் அது போலி அழகு தான்.நிஜம் என்பது வேறு திரையில் காண்பது வேறு ..நேரிடை அனுபவங்கள் மட்டுமே நமக்கு உண்மையை உணர்த்தும்.ஒவ்வொரு மனிதனின் அதிக மறக்க முடியாத நாட்களாக நினைத்தோம் என்றால் அவர்களது மறக்கமுடியாத சந்தோசமான நிகழ்வுகளும்,சோகமான,துயரமான,வருத்தமான சம்பவங்களும் தான் இருக்கும்…..ஆசிரியர் பணி என்பது மிகப்பெரிய உணர்வான வேலை…எனவே ஆசிரியர்களாகிய நீங்கள் பள்ளியில் அமர்ந்துள்ள மாணவர்களின் முகத்தை வைத்து அவர்களோடு சேர்வதற்கும் ,மாணவர்கள் ஒவ்வொருவரின் மனதிற்குள் உங்களை ஈர்க்கும் படி ஆளுமையால் நீங்கள் அவர்கள் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும் ..இன்றும் எனக்கு ஒன்றாம் வகுப்பு பாடம் எடுத்த பாத்திமா ஆசிரியையும்,ஆறாம் வகுப்பு எடுத்த பாலதண்டாயுதம் ஆசிரியர்களும் தான்.காரணம் அவர்கள் நடந்து கொண்ட விதம் தான்…மேலும் ஆசிரியர்களாகிய நீங்கள் உங்களை சுற்றியுள்ள விஷயங்களை நீங்கள் படித்தாலே அது தான் உங்களுக்கு புத்தகம்.வாழ்க்கையில் தோல்வி வரும் போது எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்பவர்களே கலாம் மாணவர்கள்..தோற்றதை எண்ணி வாழ்வை வீணாக்குபவர்கள் கிடையாது… ஆசிரியர்கள் மாணவர்களை தகுதியான மாணவர்கள் தகுதியற்ற மாணவர்கள் என்று தரம்பிரிப்பது தவறு .யாரிடத்தில் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை எந்த ஆசிரியர் வெளிக்கொண்டு வருகிறார்களோ அவர்களே கனவு ஆசிரியர்கள்..தோல்விக்கும் வெற்றிக்கும் ஒரே கூறுகள் தான்..தோற்கும் மாணவர்கள் தோல்வியின் அடையாளத்தை கண்டு ஏன் தோற்கிறோம் எப்படி தோற்கிறோம் என்பதை பின் நோக்கி பார்க்க வேண்டும்..அப்படி பார்த்தால் எளிதில் வெற்றி பெற்று விடலாம்..ஆசியர்களும் மாணவர்களிடம் தோற்பதற்கான காரணம் என்ன என்பதை அவனையே கண்டுபிடிக்க சொல்ல வேண்டும்.. மாணவர்களிடம் ஆளுமையை உருவாக்கும் அத்தனை ஆசிரியர்களும் கனவு ஆசிரியர்கள் தான் …முட்டாள் முட்டாள் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட நான் உண்மையிலேயே முட்டாளா என எனக்குள் நான் தேடிய தேடலில் என்னை இந்த உயரத்தில் ஒதுக்கியுள்ளது..முட்டாள் என்று ஒதுக்கப்பட்ட நானே தேடலில் இந்த உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் பொழுது அறிவார்ந்த சமுதாயமாக உயர்ந்து நிற்கும் மாணவர்களின் உயரம் என்னவாக இருக்கும்.கற்பனை செய்து பாருங்கள் ..இதை தான் கலாம் அவர்கள் சொன்னார் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்வதே உண்மையான வெற்றி..அதற்கு ஆக சிறந்த உதாரணம் தோல்விகளால் துரத்தப்பட்டு வெற்றியின் எல்லைக் கோட்டை அடைந்த நானே ஆவேன் என்றார்..

மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர் ஆர். ஹரிஹரன் பேசியதாவது: நான் நிறைய ஆசிரியர்களை கடந்து வந்துள்ளேன்.
தன்னார்வமிக்க ஆசிரியர்கள் கூட்டத்தில் கல்வியாளர்கள் சங்கமம் வடிவில் இன்று தான் காண்கிறேன்..
இந்நிகழ்வில் கலந்து கொண்டது தனக்கு மிகப்பெரிய திருப்தி அளிக்கிறது.எங்களது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மூலம் 2005 ஆண்டு முதல் தமிழக பள்ளிக் கல்வித்துறையோடு இணைந்து பயிற்சி அளித்து வருகிறோம்..கிட்டத்தட்ட 40 ஆயிரத்நிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்..நான்கு மாதங்களுக்கு முன்பு ஆபிஸ் 365 என்ற கணினி சார்ந்த பயிற்சியினை முதற்கட்டமாக 70 ஆசிரியர்களுக்கு அளித்து உள்ளோம்..அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அளிக்க உள்ளோம்..மேலும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மூலம் இனோவேட் எஜீகேட்டர் என்ற ஒரு புரோகிராம் வழங்கி கொண்டிருக்கிறோம்.இனோவேட் எஜீகேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த ஆசிரியர்களை கம்போடியோ,வியட்நாம்,அமெரிக்கா,பிரேசில் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறோம்..எங்களது பயிற்சியின் நோக்கமே வகுப்பறையில் கணினி மூலம் பாடம் சார்ந்த விஷயங்களை மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் வாயிலாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே..எங்களது மைக்ரோசாப்ட் மூலம் கோர்ஸ் பயில விரும்புபவர்கள் www.outlook.com இல் மெயில் ஐடி உருவாக்கி education.Microsoft.com இல் பதிவு செய்து ஆன்லைன் மூலம் படிக்க முடியும் என்றார்..

இது குறித்து கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தங்களுடைய தன்னார்வமிக்க பணிகளால் பள்ளிகளையும், மாணவர்களையும் ,
பள்ளிகளுடன் சேர்த்து சமூகத்தையும் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் வெளியில் தெரியாத விண்மீன்கள்போல எண்ணற்ற ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சங்கமிக்க செய்து அவர்களுடைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை கல்வியாளர்கள் சங்கமம் தொடர்ந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது..
இதில் ஆசிரியர்களுடன் மாணவர்களும் இணைந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் V. நந்தகுமார் அவர்களும்,தமிழ்நாடு மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர் ஆர்.ஹரிஹரன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் ஆளுமைத்திறன் மிக்க ஆசிரியர்களது கலந்துரையாடலும், தனித்திறன் மிக்க மாணவர்களது பங்கேற்பும் அரங்கேறியது.. அத்துடன் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி, இலக்குகளை தீரமானிப்பது எப்படி, திட்டமிட்டு அவற்றை அடைவது எப்படி என்பது சார்ந்த வழிகாட்டல் கருத்தாடல்களும்,
ஆசிரியர்கள் குழுவாக இணைந்து செயல்படுவது எப்படி, தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது, தன்னார்வலர்களை எவ்வாறு பள்ளியின் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வது என்பது குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது..
இதில் மாநிலம் முழுவதும் இருந்து தன்னார்வமிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது போன்ற நிகழ்வுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதோடு,ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மையோடு ஒன்று சேர்ந்து நிற்கும்…மேலும் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என தொடக்க உரை ஆற்றினார்.

முன்னதாக ஆசிரியை ஜீலி அவர்கள் எழுதி வெளியிட்ட மைகிறுக்கல்கள் என்ற கவிதை புத்தகத்தினை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் v.நந்தகுமார் வெளியிட கல்லூரி முதல்வர் ஹயாசிந் சுகந்தி பெற்றுக் கொண்டார்..பின்னர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வீட்டு உபயோக பொருட்களை வைத்து இசைக் கச்சேரி நடத்தி மாநில அளவில் மூன்றாம் இடம்பிடித்த மாணவன் அசாரூதீன்,தலைகீழாக 50 தலைவர்களின் படங்களை வரையக்கூடிய ஓவியர்,பேச்சாளர்,பல குரல் மன்னன் பெர்னால்டு ஜார்ஜ் ராஜ்,சுட்டி விகடன் மாணவ பத்திரிக்கையாளர்கள் உமர்பரூக்,விநாயமூர்த்தி ஆகியோருக்கு கல்வியாளர்கள் சங்கமத்தின் மூலம் பாராட்டி பரிசு அளிக்கப்பட்டது..பாராட்டு பெற்ற அனைத்து மாணவர்களும் தேவகோட்டை தேபிரித்தோ மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
விழாவில் காரைக்குடி சிட்டி அரிமா சங்கத் தலைவர் பொன்துரைசிங்கம்,மாவட்ட அமைச்சரவை ஒருங்கிணைப்பாளர் அரிமா பாதம்பிரியன் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான தன்னார்வமிக்க ஆசிரியர்கள், ராஜ ராஜன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள்,மாணவர்கள்,கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவ ஆசிரியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..முடிவில் தமிழாசிரியை முருகேஷ்வரி நன்றி கூறினார்..

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here