பிளஸ் 1 மறுகூட்டல் தேதி அறிவிப்பு

பிளஸ் 1 துணை தேர்வில், மறுகூட்டலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டோர், இன்று பகல், 2:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாள்களை ஆய்வு செய்த பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றால், இதே இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதை, இரண்டு நகல்கள் எடுத்து, பூர்த்தி செய்து, வரும், 4ம் தேதி, மாலைக்குள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணத்தை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here