புதுடில்லி : ‘கூகுள் இந்­தியா’ நிறு­வ­னம், நுகர்­வோ­ருக்கு கடன் வழங்­கும் சேவை­யில் கள­மி­றங்க உள்­ளது. இதற்­காக, எச்.டி.எப்.சி.,வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கோட்­டக் மகிந்­திரா வங்கி, பெட­ரல் வங்கி ஆகி­ய­வற்­று­டன் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளது.

கூகுள் இந்­தியா, 2017, செப்­டம்­ப­ரில், பணப் பரி­வர்த்­தனை சேவைக்­காக,‘தேஸ்’ என்ற, ‘ஆப்’ ஐ அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இது, கடன் சேவை­களை வழங்­கும் வகை­யில், ‘கூகுள் பே’ ஆக, மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, கூகுள் இந்­தியா வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வுக்கு என, கூகுள் பே பிரத்­யே­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆப்பை பயன்­ப­டுத்­து­வோர், சில வினா­டி­களில் சிறு கடன்­களை பெற, நான்கு வங்­கி­க­ளு­டன் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது. விண்­ணப்­பித்த நபர்­க­ளின், வங்­கிக் கணக்­கில், உட­ன­டி­யாக கடன் தொகை வரவு வைக்­கப்­படும். மிகக் குறைந்த ஆவண நடை­மு­றை­களில், சுல­ப­மாக சிறு கடன்­களை பெற­லாம்.

பஸ், உண­வ­கம், பழு­து­பார்ப்பு சேவை உள்­ளிட்­ட­வற்­றுக்கு, கூகுள் பே மூலம் பணம் செலுத்­த­லாம். நாட்­டில், மூன்று லட்­சத்­திற்­கும் அதி­க­மான பெரு மற்­றும் சிறிய நக­ரங்­களில், 5.5 கோடி பேர், இந்த ஆப்பை பதி­வி­றக்­கி­யுள்­ள­னர். ஆண்­டுக்கு, 21 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­பி­லான பணப் பரி­வர்த்­த­னை­கள் நடை­பெ­று­கின்­றன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here