பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசுபள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை,ஆக.30: புதுக்கோட்டை ஒன்றியம் கம்மங்காடு ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது..
பேரணியை தொடங்கி வைத்து பள்ளித் தலைமையாசிரியர் கோ.சுமதி கூறியதாவது: கம்மங்காடு ஒரு விவசாய பூமி எனவே இங்குள்ள மண்வளத்தை பாதுகாக்கவும்,விவசாயத்தை காக்கவும்,கால்நடைகளை பாதுகாக்கவும் இன்றைய தினம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி பள்ளிமாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது..மேலும் பள்ளிவளாகத்தை சுற்றியுள்ள அனைத்து கடைகளுக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தினர் என்றார்.
முன்னதாக பிளாஸ்டிக் தவிர்ப்போம்,மண்வளம்காப்போம்,மரம் வளர்ப்போம் என்பது போன்ற பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வு எடுத்தினர்..பின்னர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி மரக்கன்றுகள் வழங்கி பராமரித்திட கேட்டுக்கொண்டனர்..பேரணி முடிவில் பள்ளிதலைமையாசிரியர் முன்னிலையில் ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர்கழக உறுப்பினர்கள்,கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள்,மகளிர் மன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பேரணிக்கான ஏற்பாட்டினை சுற்றுச் சூழல் மன்ற அறிவியல் பட்டதாரி ஆசிரியை செ.மைதிலி செய்திருந்தார்..இடைநிலை ஆசிரியை மீரா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here