இன்றைய ராசிபலன்
 • மேஷம்
  மேஷம்: உணர்ச்சி வேகத் தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உடன் பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.
 • ரிஷபம்
  ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர் பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாகும். வியா பாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். இனிமையான நாள்.  
 • மிதுனம்
  மிதுனம்: தவறு செய்பவர்களை  தட்டிக்  கேட்பீர்கள்.உடன்பிறந்தவர்கள்உங்களிடம் முக்கிய விஷ யங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 • கடகம்
  கடகம்: காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அரைக் குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோ கத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்ப் புகள் அடங்கும் நாள்.  
 • சிம்மம்
  சிம்மம்: காலை 11 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.  
 • கன்னி
  கன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. தாயார் ஆதரித்துப் பேசுவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள். 
 • துலாம்
  துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின்பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 
 • விருச்சிகம்
  விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்துயோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்கு வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். 
   
 • தனுசு
  தனுசு: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.  
 • மகரம்
  மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதுவாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.
 • கும்பம்
  கும்பம்: காலை 11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் பொறு மை காப்பது நல்லது. பிற் பகல் முதல் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். கடனாககொடுத்த பணம் கைக்கு வரும். புதிய வர்கள் நண்பர்களாவார்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள். 
 • மீனம்
  மீனம்: காலை 11 மணிமுதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில்அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here