கூகுள் டிரைவில் உள்ள நீண்டநாள் வாட்ஸ்ஆப் தகவல்களைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் கணக்கு பயன்பாட்டில் இருக்க வேண்டும். கூகுள் டிரைவில் உள்ள தகவல்கள் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக காலியான இடம் இருக்க வேண்டும். கூகுள் பிளே, ஆன்ட்ராய்ட் பிரிவு 2.3.4 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். பின்னர், வாட்ஸ்ஆப்பில் உள்ள செட்டிங்ஸ் பிரிவில் சென்று சாட்ஸ், சாட் பேக்கப்-பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வாட்ஸ்ஆப் – ஐ ரீ-இன்ஸ்டால் செய்தால் அனைத்து பேக்கப்களும் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும். இந்த செயலின்போது Wi-Fi இணைப்பில் இருந்தால் உடனடியாகப் பதிவிறக்கம் செய்யலாம். இல்லை டேட்டாவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதேபோல், ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை கூகுள் டிரைவில் பேக்கப் செய்வதற்கு வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று சாட்ஸ், சாட் பேக்கப், பேக்கப் டூ கூகுள் டிரைவ்-ஐ கிளிக் செய்து, பின்னர் பேக்கப் செய்வது மாதந்தோறுமா அல்லது தினந்தோறுமா என்பதைத் தேர்வு செய்தால் போதும். கூகுள் டிரைவிற்கு தகவல்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்துவிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here