சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆக.31 வரை மருத்துவ முகாம்

பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னையில் இன்று முதல், 31ம் தேதி வரை, மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில், சென்னை மாவட்டத்தில், 1 முதல், 18 வயது வரை உள்ளவர்களுக்கான மருத்துவ முகாமிற்குஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

இதில், முடநீக்கு வல்லுனர், தொண்டை, காது, மூக்கு, கண், குழந்தைகள் நலன் மற்றும் மனநல டாக்டர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.முகாமில் செவித்திறன் குறைபாடு, பார்வை குறைபாடு, மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிதல் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, நிபுணர்களிடம்பரிசோதனை செய்து கொள்ளலாம்.முகாமுக்கு வருவோர்,
 நான்கு புகைப்படங்கள், 
வருவாய், மருத்துவசான்றிதழ்கள், 
அடையாள அட்டையின் நகல்  ஆகிய வற்றை எடுத்து வர வேண்டும்.

முகாம், காலை, 9:30 மணி முதல், மதியம், 2:00 மணி வரை நடைபெறும்.

முகாம் நடக்கும் இடங்கள்:
 கொருக்குப்பேட்டை, புத்தா தெரு, சென்னை பள்ளி, 
அடையாறு, இந்திரா நகர், 29வது குறுக்கு தெரு, சென்னை தொடக்கப் பள்ளிகளில், இன்று முகாம் நடைபெறும்.
 ராயபுரம், அரத்துாண் சாலை உருது பள்ளி, நந்தனம், சி.ஐ.டி., நகர், 4வது பிரதான சாலை, சென்னை தொடக்கப் பள்ளிகளில், நாளை முகாம் நடைபெறும்
 தி.நகர், பிரகாசம் சாலை, சென்னை நடுநிலைப் பள்ளி, சூளை, வி.கே.பிள்ளை தெரு, சென்னை நடுநிலைப் பள்ளிகளில், 29ம் தேதியும், பெரம்பூர், டி.வி.கே.நகர், சென்னை தொடக்கப் பள்ளி; திருவல்லிக்கேணி, அருணாச்சலம் சாலை, சென்னை சமுதாய கல்லுாரியில், 30ம் தேதியும் முகாம் நடைபெறும்
 நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ராமா தெரு, சென்னை நடுநிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, மெக்னிக்கல்ஸ் சாலை, சென்னை பள்ளியில், 31ம் தேதி முகாம் நடைபெறும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here