இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று ஆரோக்கியநிலை சீராக இருக்கும். ஏதாவது ஒரு நினைவில் மனம் உழன்றுகொண்டே இருக்கும். பயண ஆர்வமும், சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள். சமூக சேவைக்கான எண்ணம் எழும்.

ரிஷபம்

தொழிலில் அதிக இலாப வரவால் தனலாபமும் பெருகும்., நல்ஆரோக்கியமும் ஏற்படும். கல்வியில் முன்னேற்றத் தடைகள் ஏற்படலாம். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.

மிதுனம்

இன்று, ஆராய்ச்சி மனப்பான்மையொடு செயல்படுவீர்கள். நண்பர்களின் தொடர்பு நலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். கடல் கடந்த விவகாரங்கள் வெற்றி அளிக்கும்

கன்னி

இன்று விரும்பிய பொருள்கள் வீடுவந்து சேரும். வியாபாரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதனால் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.

மகரம்

இன்று மரியாதைக் குறைவுகளால் மன உழைச்சல் ஏற்படலாம். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சுமாரான ஆதாயம் அடைவீர்கள். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை.

கடகம்

இன்று, கூட்டாளிகளால் இலாபம் இருக்காது. கதாநாயகனாக எண்ணிக் கொள்வதையும், தியாக மனப்பான்மையையும் கைவிடுவது நல்லது. பெண்கள் வழக்குகளைச் சந்திக்க நேரலாம்.

சிம்மம்

இன்று தங்கள் மனையாள் இனிய மாற்றங்களையும், இன்பப் பயணங்களையும் விரும்புவார். தனவருமானம் அதிகரிக்கும். உறவுகளை சந்திப்பதால் உற்சாகம் பெருகும்

துலாம்

குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதைத் தவிர்க்கவும். பயணங்களில் ஏற்படும் தடையால் அமைதியற்ற மனநிலையில் இருப்பீர்கள்.

மீனம்

இன்று, சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் சுமுகமாக இருந்தால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

தனுசு

இன்று குழந்தைகள்பால் பாசமழை பொழிவீர்கள். எல்லாவற்றிலும் சுலபமாக வெற்றிகள் குவியும். பலவழிகளிலும் தனலாபம் அதிகரிக்கும். நண்பன், நண்பிகளின் அருகாமை ஆனந்தம் தரும்.

விருச்சிகம்

இன்று, மனோபயம் அதிகரிக்கும். எல்லாவற்றிலும், அனைவரின் மீதும் ஒரு சந்தேக சூழலே நிலவும். ஆரோக்கியக் குறைவு, மனக் கவலைகளால் குடும்ப வாழ்க்கையில் குதூகலம் குறையும்.

கும்பம்

இன்று, பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். இடமாற்றங்கள் ஏற்படலாம். விவசாயம் மூலமான இலாபங்கள் இருக்கும். வாகன யோகம் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here