சென்னை நகர் உருவாகியதாக கருதப்படும்  ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. மெட்ராஸ் நகரமாக மாறியதன் துவக்கம். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியர், விஜயநகர பேரரசின் மன்னரான பெடா வெங்கட ராயா என்பவரிடம் வர்த்தக ஸ்தாபனமான ஜெயின் ஜார்ஜ் கோட்டை அமைக்க, மூன்று சதுர மைல் அளவில், ஒரு இடத்தை சட்டப்படி உரிமையாக பெற்றதுதான். அந்த நாளான 1639 ஆகஸ்ட் 22ம் தேதிதான் மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாட துவங்கியது 2004ம் ஆண்டிலிருந்துதான். இன்று ஆண்டுதோறும் சென்னை தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் மயிலாப்பூர் தினமாக  கொண்டாடப்பட்டது. அதன்பிறகு பிறகு, மெட்ராஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது. வழக்கமான விழா கொண்டாட்டங்கள் போலவே, மெட்ராஸ் தினமும் உள்ளது. இந்த தினத்தை கொண்டாடியவர்கள் சுமார் நான்கு போட்டிகள் மட்டுமே நடத்தினர்.  ஆனால் இன்று மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு மாரத்தான், பாரம்பரிய நடனம், கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம், போட்டோ, கலாச்சார உணவுகள், புல்லெட் சுற்றுலா என  50க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம்பெறுகிறது. 

சென்னைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரையில் இரண்டாவது இடத்தை மெரினாதான் வகிக்கிறது. மெரினா கடற்கரை அவ்வளவு அழகும் அற்புதமும் கொண்டது.  ஆனால், இந்தியர்களுடைய மனப்பான்மை என்னவோ, பெரிய நகரங்களையும் கட்டிடங்களையும் நதிக்கரையில்தான் உருவாக்குவார்கள். கடற்கரை பகுதிகளை இந்தியர்கள் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. ஆங்கிலேயர்கள் மட்டும் இந்த கடற்கரை அழகை பார்த்து, ரசித்து பிடித்துப்போய் நகரமாக்கவில்லை என்றால், மெரினா இதுவரை மீனவர் ஊர்களாக மட்டுமே விளங்கி இருக்கும். செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான் மெட்ராசின் பிரதானம். ஆங்கிலேயர்கள்  தென்னிந்தியாவின் ஆட்சி தலைமையிடமாகவே மெட்ராஸ் மாறியது. இதனை தொடர்ந்து, முக்கிய அலுவலக கட்டிடங்கள், நீதிமன்றம், போக்குவரத்து நிலையங்கள் என ஒவ்வொன்றாக வரத்துவங்கின. அன்று விசாலமான தெருக்களும், பிரமாண்ட கட்டிடங்களும் அடையாளமான விளங்கின. இன்றுபோல அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்த ஜன நெருக்கடி மிகுந்த நகரமாக இல்லை. இன்றுபோல ஊர்ந்து செல்லும் நெரிசல் மிகுந்த சாலைகளாக இருந்ததில்லை. ஒரு சில நூற்றாண்டுக்கு முன்னால், ஒரு சில கட்டடங்களோடு வெறிச்சோடி இருக்கும் பழைய படங்களை பார்க்கும் போது, மீண்டும் அந்த நிலைக்கு வர வாய்ப்பே இல்லையா என்ற ஏக்கம் நிச்சயமாக எழும்.  கூவம் அன்று நீராடும் நதியாக இருந்தது. படகு போக்குவரத்துகள் இருந்தன.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here