பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு


சென்னை: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித்தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ் 2 தேர்வை, தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது பிளஸ் 1 தேர்வும் அரசு பொதுத்தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் தான், பிளஸ் 2 தேர்வை எழுத முடியும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here