ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி
தேர்வு பயிற்சி மையம் கூறியிருப்பதாவது*

*மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) 2019ம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட  குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கு அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது*

 *இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற  விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களிடம் இருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இணையதள வழி விண்ணப்பம் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 19ம் தேதி வரை  விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும்*

*அதைத் தொடர்ந்து நவம்பர் 18ம் தேதி தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பயிற்சி மையத்தின் இணையதளமான www.civilservicecoaching.com மூலம்  அறிந்து கொள்ளலாம்*

 *இப்பயிற்சி மையத்தில் ஏற்கனவே முதல் நிலை தேர்வுக்கு முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here