தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போன் எடுக்க பாக்கெட்டில் கையை நுழைத்த பின், ஸ்மார்ட்போன் அங்கு இல்லாத நிலையை உணர்ந்திருக்கிறீர்களா? இதுபோன்ற அனுபவம் நினைக்கவே கடினமானதாக இருக்கும். ஒருவேளை போன் தொலைந்து போயிருந்தால்? அல்லது அதை எங்காவது தவறுதலாக வைத்திருந்தால்? அதில் இருக்கும் டேட்டா, கான்டாக்ட் மற்றும் புகைப்படங்களின் நிலை என்னவாகும்?
உங்களின் மூளை கடைசியாக போனினை எங்கே வைத்தோம் என்ற எண்ணத்தை நினைப்படுத்தும். இனி உங்களது போனை நீங்கள் வைத்த இடம் நினைவுக்கு வரலாம் அல்லது அதனை நல்ல உள்ளம் கொண்டவர் எடுத்துக் கொண்டு உடனடியாக உங்களுக்கு அதனை வழங்கலாம். எனினும், சில சமயங்களில் போன் கிடைக்காமல் போகவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

ஃபைன்ட் யுவர் போன்

இதுபோன்ற சூழ்நிலைகளில் கைக்கொடுக்கும் வகையில், ஆப்பிள் ஃபைன்ட் மை போன் அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் ஃபைன்ட் யுவர் போன் அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும்.

இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,

உங்களிடம் இருக்க வேண்டியவை:
– இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டர்
– உங்களது கூகுள் அக்கவுன்ட் லாக்-இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு

பின்பற்ற வேண்டியவை:

1. முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும்
2. தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும்
3. இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்
4. அடுத்து ‘Your timeline’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5. இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்
6. உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய லொகேஷனுடன் காண்பிக்கும்

குறிப்பு:

இந்த அம்சம் சீராக வேலை செய்ய உங்களது சாதனம் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டிருப்பதோடு லொகேஷன் சேவைகளும் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here