டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ அன்மையில் மேக்னட்டிக் டேப் உள்ள பழைய ஏடிஎம் டெபிட் கார்டுகள வேலை செய்யாது என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.
பழைய கார்டுகள் வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு உள்ள கிளைகளுக்குச் சென்று சிப் வைக்கப்பட்டுள்ள கார்டுகளுக்காகக் கோரிக்கையினை அளிக்குமாறும் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் அறிவிப்பு
எஸ்பிஐ வங்கி டிவிட்டரில் ஆர்பிஐ விதிகளின் படி 2018-ம் ஆண்டுக்கு பிறகு பழைய மேக்னட்டிக் டேப் உள்ள எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் செல்லாது என்றும், இந்தக் கார்டு மாற்ற முறை பாதுகாப்பானது என்று கட்டணம் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
எனவே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை மாற்ற கோரிக்கையினை அளிக்குமாறும் டிசம்பர் 31 வரை செய்யவில்லை என்றால் பழைய கர்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் செல்லாது என்று கூறுகின்றனர்.
சுதேசி
இந்தியாவின் நம்பர் 1 சுதேசி நிறுவனம் என்ற பெயரினை பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ பெற்றுள்ளது. நிதி துறையிலும் எஸ்பிஐ-க்கு அடுத்தபடியாக எல்ஐசி நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here