சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு!


சென்னை ராஜாஜி சாலையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் விளையாட்டு வீரர்களின் வேலை வாய்ப்பு குறித்துப் பேசியதாவது:

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு 2% உள்ஒதுக்கீடு அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். தகுதி வாய்ந்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். குழு அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று தெரிவித்தார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here