*ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு*

*திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார்* அவர்களை எதிர்த்து 16.08.2018 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அதற்காக இன்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பள்ளிக் கல்வி துறை செயலரை சந்திக்க முடிவு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து,

*இன்று 13.08.2018 ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அன்பரசு மற்றும் திரு.வெங்கடேசன் ஆகியோருடன் ஜாக்டோ – ஜியோ செய்தி தொடர்பாளர் திரு.கு.தியாகராஜன் மற்றும் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு.பக்தவச்சலம் ஆகியோர் பள்ளிக் கல்வி துறை செயலரை சந்திந்தனர்.*

சந்திப்பின் போது,
திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் சார்ந்த புகார்களை தெரிவிக்கப்பட்டது.

*பள்ளிக்கல்வி துறை செயலர் அவர்கள் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.*

மேலும் இதை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்ட போது, *இயக்குனர் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் சார்ந்த புகார்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததோடு,*

*அம்மாவட்டத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.*

ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று பள்ளிக் கல்வி துறை செயலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்ததன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள அவர்களுக்கு உரிய *கால அவகாசம் வழங்கும் வகையில் வரும் 16.08.2018 அன்று நடைப்பெறவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.*
மேலும் காலதாமதம் ஏற்படும் போது *ஜாக்டோ-ஜியோ அடுத்தக் கட்ட போராட்டத்தை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ-ஜியோ.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here