மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது… குணப்படுத்துவது எப்படி?


கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கும். ஏறக்குறைய, பாதியளவு பாதிக்கப்பட்ட பின்னர்தான் இதன் பாதிப்பே வெளியில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here