சூரியன் மறைந்தது


கலைஞர் கருணாநிதி பற்றிகட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய 25 விஷயங்கள்!

கலைஞர் கருணாநிதி பற்றிகட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய 25 விஷயங்கள்!

திமுக தலைவர் கருணாநிதி இன்றுதனது 95வது பிறந்த நாளைகொண்டாடுகிறார். அவரைப் பற்றிகட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய 25 விஷயங்கள் இங்கேதொகுக்கப்பட்டுள்ளது.

 1. கருணாநிதிஆட்சி காலத்தில்கட்டப்பட்ட மூன்று முக்கியகட்டிடங்கள். 1. சென்னையில்வள்ளுவர் கோட்டம். 2. பூம்புகாரில்சிலப்பதிகார கலைக் கூடம். 3.குமரிமுனையில் 133 அடி உயரஅய்யன் திருவள்ளுவர் சிலை.இவையெல்லாம் கட்டிட கலைக்குஎடுத்துக்காட்டு.
 1. கருணாநிதி1941ம் ஆண்டு‘‘மாணவ நேசன்’’ என்றகையெழுத்து பத்திரிகையைதொடங்கி நடத்தி வந்தார். 1942ம்ஆண்டு அதனை முரசொலி துண்டுபிரசுரமாக்கினார். பின்னர் வாரஇதழ், நாளிதழாக மாறியது.அதுதான் அவர் பெற்ற முதல்குழந்தை.
 1. கருணாநிதிதனது 14வது வயதில்இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைஉருவாக்கினார். அதுவேபின்னாளில் அனைத்து மாணவர்கழகம் என்ற அமைப்பாகஉருவாகியது. இந்த அமைப்புதான்திராவிடையக்கத்தின் முதல்மாணவர் அமைப்பாகும்.
 1. நீதிக்கட்சி தலைவர்களில்ஒருவரான அழகிரி சாமியின்பேச்சின் பால் ஈர்க்கப்பட்டு, 14வயதில் அரசியலுக்கு வந்தார்.அன்று ஆரம்பித்த அவரின் அரசியல்பயணம் இன்னமும் தொடர்கிறது.
 1. கருணாநிதிசந்தித்த முதல்சட்டமன்ற தேர்தல் 1957ம் ஆண்டு.குளித்தலையில் போட்டியிட்டுவெற்றி பெற்ற அவர் 2016 வரையில்போட்டியிட்ட எந்த தேர்தலில்தோற்றதே இல்லை. சேப்பாக்கம்தொகுதியில் மட்டும் மூன்று முறைபோட்டியிட்டு ஜெயித்தார். 2016ம்ஆண்டு தேர்தலில் மாநிலத்திலேயேஅதிக வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றியை கொடுத்தனர், சொந்ததொகுதியான திருவாரூர் மக்கள்.
 1. ஒருகட்சியின் தலைவராக 45ஆண்டுகளுக்கு மேலாகபணியாற்றிய பெருமைகருணாநிதிக்கு மட்டுமேகிடைத்துள்ளது. அவர் தமிழகத்தின்முதல்வராக 5 முறை இருந்ததும்மிகப் பெரிய சாதனையே.
 1. 14ஆண்டுகள்எதிர்கட்சிதலைவராக இருந்த போதிலும்கட்சியை உயிரோட்டமாகவைத்திருக்கும் திறமையை அவர்பெற்றிருந்தார்.
 1. ஆரம்பத்தில்அசைவ உணவைவிரும்பி சாப்பிட்ட கருணாநிதி,பிற்காலத்தில் அசைவ உணவுக்குமாறினர்.
 1. கருணாநிதி20வது வயதில்ஜூபிடர் பிக்சர்ஸில் திரைக்கதைஎழுத்தாளராக பணியில் சேர்ந்தார். 39 திரைப்படங்களுக்கு கதை வசனம்எழுதியுள்ளார்.
 1. இதுவரையில்10 நாடகங்களைஎழுதியுள்ளார். 13 இலக்கியபுத்தகங்களை எழுதியுள்ளார்.
 1. நவீனதொழில் நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார்.ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மூத்த தலைவர் அவர்தான்.
 1. கருணாநிதிகட்சி தலைவராகஇருந்த போது 1972ம் ஆண்டுஎம்.ஜி.ஆர். கட்சியில் இருந்துபிரிந்து சென்றார். அதன் பின்னர்1993ம் ஆண்டு வைகோ கட்சியில்இருந்து பிரிந்து சென்றார். வைகோபின்னாளில் கருணாநிதியோடுதேர்தல் கூட்டணி வைத்தார்.இரண்டு பிளவுகளை கட்சி சந்தித்தபோதும், கட்சியை கட்டுக் கோப்பாகநடத்தி வந்தார்.
 1. கருணாநிதியின்சகோதரியின்மகன் முரசொலி மாறன், திமுகவின்ராஜ்யசபா எம்.பி.யாகவும், மத்தியஅமைச்சராகவும் இருந்தார். முதல்மனைவியின் மகன் மு.க.முத்துவைசினிமா நடிகராக்க எடுத்தமுயற்சிகள் தோல்வியில் முடிந்தது.அவரது இரண்டாவது மனைவிதயாளுவின் மகன் மு.க.ஸ்டாலினைதனது அரசியல் வாரிசாகஅரசியலில் உருவாக்கினார். அவர்சட்டமன்ற உறுப்பினர், மேயர்,துணை முதல்வர் என பல்வேறுபதவிகளை வகித்து தற்போது,கட்சியின் பொருளாளராகவும்,செயல்தலைவராகவும் உள்ளார்.இன்னொரு மகன் மு.க.அழகிரி,மத்திய அமைச்சராக இருந்தார்.மூன்றாவது மனைவி தயாளுவின்மகள் கனிமொழி ராஜ்யசபாஉறுப்பினராகவும், கட்சியின்மகளிரணி செயலாளராகவும்இருந்து வருகிறார். முரசொலிமாறனின் மகன் தயாநிதி மாறன்,மத்திய அமைச்சராக இருந்தார்.
 1. கருணாநிதிமீது ஊழல் புகார்குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டபோதிலும் , எதுவும்நிருபிக்கப்படவில்லை. சர்காரியாகமிஷன் அமைக்க்கப்பட்டபோதிலும் குற்றச்சாட்டுக்கள்எதுவும் நிருபிக்கப்படவில்லை.
 1. கருணாநிதிஆட்சிக் காலத்தில்ஏராளமான பாலங்கள் கட்டினார்.அதில் திருநெல்வேலியில் அவர்கட்டிய இரடுக்கு மேம்பாலம் அவர்பெயரைச் எப்போதும் சொல்லும்.சென்னையில் 9 மேம்பாலங்கள்கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம்ஏற்பட்டதும் மேம்பாலம் கட்டியதில்முறைகேடு நடந்து இருப்பதாகசொல்லி, இரவோடு இரவாககருணாநிதி கைது செய்யப்பட்டார்.ஆனால், கடைசி வரையில் அந்தவழக்கில் குற்றப்பத்திரிகையைதாக்கல் செய்யப்படாமலேயேமுடிவுக்கு வந்தது.
 1. கருணாநிதிகுடியிருக்கும்கோபாலபுரம் வீட்டை தனதுமறைவுக்குப் பின்னர்மருத்துவமனையாக்கிஏழைகளுக்கு உதவ வேண்டும் எனஉயில் எழுதி வைத்துள்ளார்.
 1. எழுத்தாளர்களைஊக்கிவிக்கும்வகையில் தனது சொந்த பணத்தில்இருந்து ரூ.1 கோடியைவழங்கியுள்ளார். ஓவ்வொருஆண்டும் புத்தக கண்காட்சியின்போது, கலைஞர் பொற்கிழி விருதுவழங்கப்பட்டு வருகிறது.
 1. 96ம்ஆண்டுதேர்தலுக்கு சிலநாட்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தஜி.கே. மூப்பனாருடன் கூட்டணிஅமைத்து ஆட்சியைப் பிடித்தார்,கருணாநிதி. 99ம் ஆண்டு யார்பிரதமர் என்ற கேள்வி எழுந்த போது,சென்னை விமான நிலையத்தில்பேட்டியளித்த கருணாநிதியிடம்,நீங்கள் பிரதமராவீர்களா என்றுசெய்தியாளர்கள் கேட்டனர். அதற்குஅவர் என் உயரம் எனக்குத் தெரியும்என பதிலளித்தார். இந்த பதிலேதிமுக – தமாகா கூட்டணி உடையகாரணமாக அமைந்தது. அப்போதுபிரதமர் பதவிக்கு ஜி.கே.மூப்பனார்முயற்சி செய்ததாகவும், கருணாநிதிஆதரிக்கவில்லை என்றும்சொல்வார்கள்.
 1. திமுகதலைவர் கருணாநிதிக்குசீட்டாடுவது பிடித்தமான பொழுதுபோக்கு. ரயில் பயணத்தின் போதும்,ஓய்வு நேரங்களிலும் அவர் தனதுநெருக்கமான நண்பர்களுடன்சீட்டாடுவதை வழக்கமாகவைத்திருந்தார்.
 1. கருணாநிதிதீவிரமானகிரிக்கெட் ரசிகர்.பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டால் கூட அவ்வப்போதுகிரிக்கெட் ஸ்கோரை அவருக்குசொல்ல வேண்டும். எதிர்கட்சியாகஇருக்கும் போது, டிவியில் முழுபோட்டியையும் பார்த்துரசிப்பதுண்டு. சச்சின், டோனியின்ஆட்டம் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
 1. ஈழதமிழர்களுக்கு ஆதரவுகொடுத்தவர்களில் கருணாநிதிமுக்கியமானவர். இலங்கை சென்றஅமைதிப்படையினர் தமிழர்கள் மீதுபல்வேறு வன் செயல்களில்ஈடுபட்டதாக புகார் வந்தது. அதனால்அவர்கள் சென்னை திரும்பி வந்தபோது வரவேற்க போகவில்லை.பின்னாளில் இவருடைய ஆட்சியைகலைக்க, அதுவே காரணமாகஅமைந்தது.
 1. அதிகாலை4 மணிக்குஎழுந்துவிடும் கருணாநிதி,அன்றைய நாளிதழ், பருவஇதழ்களை படித்துவிடுவதைவழக்கமாக வைத்திருந்தார். அந்தஇதழ்களில் தன்னைப் பற்றிசெய்திகள் வந்தால், உடனடியாகசம்மந்தப்பட்ட பத்திரிகைக்கு போன்போட்டு பேசும் பழக்கத்தைவைத்திருந்தார்.
 1. கருணாநிதிஅதிகாலைநடைபயிற்சி எடுத்துக் கொள்வதைவழக்கமாக வைத்திருந்தார்.பெரும்பாலும் அவர் தனதுநடைபயிற்சியைஅறிவாலயத்திலேயே முடித்துக்கொள்வார். அப்போது அவருடன்கட்சியின் மூத்த தலைவர்கள்யாராவது இருப்பார்கள்.
 1. வயதுஅதிகரித்த பின்னர்நடைபயிற்சியை செய்ய முடியாதசூழலில், யோகா செய்வதைவழக்கமாக வைத்திருந்தார்.
 1. தமிழர்திருநாளாம் பொங்கல்பண்டிகையன்று புத்தாடை உடுத்தி,குடும்பத்தினருடன்கொண்டாடுவார். இப்போதெல்லாம்தன்னை சந்திக்கும் குடும்பத்தினர்,கட்சிக்காரர்களுக்கு ரூ.10 பரிசாகவழங்குவதை வழக்கமாக்கிகொண்டுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here