. *🌍வரலாற்றில் இன்று🌍*
┈┉┅━❀••🔅🌍🔅••❀━┅┉┈
. *🗓07.08.2018🗓*

*❇️🅾️கிரிகோரியன் ஆண்டின் 219 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 220 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன.*

*🌍நிகழ்வுகள்🌍*

🔹கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் “கிரான்னன்” என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

🔸1461 – மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

🔹1819 – கொலம்பியாவின் “பொயாக்கா” என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

🔸1832 – இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

🔹1898 – யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

🔸1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

🔹1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

🔸1933 – ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

🔹1942 – இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

🔸1944 – திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

🔹1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

🔸1955 – சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.

🔹1960 – கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

🔸1970 – தேய்வழிவுப் போர் முடிவுற்றது.

🔹1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

🔸1998 – தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

🔹2006 – இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

*🌍பிறப்புகள்🌍*

🔸1642 – உமறுப் புலவர்,சீறாப்புராணம்-முகமது நபியின் வரலாறு

🔹1876 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (இ. 1917)

🔸1912 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)

🔹1925 – மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்திய உயிரியலாளர்

🔸1928 – யேம்சு ராண்டி, கனடிய-அமெரிக்க நடிகர்

🔹1933 – எலினோர் ஒசுட்ரொம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2012)

🔸1946 – ஜான் மேத்தர், அமெரிக்க விண்மீனியல் அறிஞர்

🔹1948 – கிறெக் சப்பல், ஆத்திரேலியத் துடுப்பாளர்

🔸1950 – சி. தண்டாயுதபாணி, இலங்கை அரசியல்வாதி

🔹1950 – ஒசி அபேகுணசேகரா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)

🔸1963 – நிக் கிலெஸ்பி, அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர்

🔹1966 – ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர்

🔸1975 – சார்லீசு தெரன், தென்னாப்பிரிக்க-அமெரிக்க நடிகை

🔹1978 – அலெக்சாண்டர் அஜா, பிரெஞ்சு இயக்குநர்

*🌍இறப்புகள்🌍*

🔸1941 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் (பி. 1861)

🔹1974 – வாணிதாசன், புதுவைத் தமிழறிஞர், கவிஞர் (பி. 1915)

🔸1996 – கிருஷாந்தி குமாரசுவாமி, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டவர் (பி. 1977)

🔹2013 – ச. சபாநாயகம், ஈழத்து மரபுவழி ஓவியர்

🔸2014 – சுருளி மனோகர், தென்னிந்திய நகைச்சுவை நடிகர்

*🌍சிறப்பு நிகழ்வு🌍*

🔹இளைஞர் தினம் (கிரிபட்டி)

🔸குடியரசு நாள் (கோட் டிவார்)

◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️◇️◆️

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here