சீருடை அணிந்திருந்தாலேஅரசுப்பேருந்தில் இலவசம்.!அமைச்சர் அதிரடி உத்தரவு  பள்ளிமாணவர்கள் சீருடைஅணிந்திருந்தாலேஅரசுப்பேருந்தில்இலவசமாக பயணிக்கலாம் என்றுஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளிமாணவர்களுக்கு பல்வேறுசலுகைகளை வழங்கி வருகிறது. 32மாவட்ட நூலகங்களில், ஐ.ஏ.எஸ்.பயிற்சி வகுப்புகள்,13மாவட்டங்களில் நடமாடும்நூலகங்கள் ,நூலகங்கள் மூலம்சிவில் சர்வீஸ் தேர்விற்கு பயிற்சி ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்குபட்டயக் கணக்காளர் பயிற்சி,அடுத்த கல்வி ஆண்டு முதல், அரசுபள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு சீருடைகள்மாற்றம்,12 ஆம் வகுப்பு புதியபாடத்திட்டத்தில் “திறன் வளர்ப்புபயிற்சி (Skills Training)” தொடர்பானபுதிய பாடம் சேர்க்கை , 3 ஆயிரம்பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸ்,ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு,ஆசிரியர்களின் வருகைப்பதிவுசெல்போன் செயலி மூலம்பதிவேற்றும் வசதி உட்பட பலதிட்டங்கள்நடைமுறைப்படுத்தபட்டும்,தயாராகியும் வருகின்றது.

இந்நிலையில் அரசு பள்ளிமாணாவர்கள் தற்போதுவரைநகரப்பேருந்துகளில் மட்டுமேபள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இதனால் இந்த முறையை மாற்றும்விதமாக போக்குவரத்துதுறைஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்அறிவிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,பள்ளிமாணவர்கள் சீருடைஅணிந்திருந்தாலேஅரசுப்பேருந்தில் இலவசமாகபயணிக்கலாம்.

மேலும் அரசுப்பேருந்துகளில்மாணவர்களை அனுமதிக்கநடத்துனருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களுக்கு இலவச பேருந்துஅடையாள அட்டைகள் இன்னும் 2மாதத்தில் வழங்கப்படும் என்றும்தெரிவித்துள்ளார்.

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here